News December 6, 2024

ஹைப்ரிட் மாடலுக்கு பணிந்த PCB!

image

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை யுஏஇ மற்றும் பாகிஸ்தானில் நடத்த PCB சம்மதம் தெரிவித்துள்ளதாக ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இந்தியாவின் அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடைபெற உள்ளது. மேலும் இந்த ஹைபிரிட் முறை 2027ஆம் ஆண்டு வரை நடைபெறும் அனைத்து ஐசிசி தொடரிலும் இது கடைபிடிக்கப்பட உள்ளது. இதற்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 6, 2024

இந்திய சினிமாவில் உச்சம் தொட்ட “புஷ்பா 2”

image

புஷ்பா 2 படம் இந்திய அளவில் முதல் நாளில் ₹175கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, டப் செய்து ஹிந்தியில் வெளியான இந்த படம் பாலிவுட்டில் மட்டும், ₹65-₹67 கோடிகளை குவித்து விட்டதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக படம் முதல் நாளில் ₹200 கோடியை கடந்து விட்ட நிலையில், இது சினிமா வரலாற்றிலேயே முதல் நாளில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் புஷ்பா 2 படம் பெற்றுள்ளது. Wildfire தான்..

News December 6, 2024

பொன்முடி மீது சேறு வீசியவர்கள் மீது வழக்கு

image

விழுப்புரத்தில் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வுக்கு சென்ற மினிஸ்டர் பொன்முடி மீது சேற்றை அள்ளி வீசிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த பாஜக பெண் நிர்வாகி விஜயராணி, ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் பொதுமக்களை பழிவாங்கக் கூடாது என ஜெயக்குமாரும், சேறு வீசியது தவறு என ராமதாஸும் கருத்து தெரிவித்திருந்தனர்.

News December 6, 2024

வரலாற்றை மாற்றிய பாபர் மசூதி இடிப்பு தினம்

image

1992 டிசம்பரில் நடந்த சம்பவம், 32 ஆண்டுகளாகியும் இன்றும் பதற்றம் நீடிக்கிறது. 1980ல் விஷ்வ ஹிந்து பரிஷத் பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என எழுப்பிய முழக்கம் 12 ஆண்டுகளில் நாட்டையே உலுக்கியது. இந்நிகழ்வை தொடர்ந்து நடைபெற்ற பல கலவரங்களும், நிகழ்வுகளும் இந்திய தேசிய அரசியலின் போக்கையுமே மாற்றியமைத்தது. சர்ச்சைகள் நிறைந்த இந்திய அரசியலின் ஒரு முக்கிய மையப்புள்ளி என்றே கூறலாம்.

News December 6, 2024

பிரிவினை கட்சியா நாம் தமிழர்?

image

சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎஸ் நிகழ்ச்சி ஒன்றில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாத கட்சி என்று பேசினார். இது, சீமான் மற்றும் கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் அரசியல் கட்சி குறித்து இவ்வாறு பேசியிருப்பது அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாம் தமிழர் குறித்து உங்களது கருத்து என்ன?

News December 6, 2024

பொதுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்

image

10, +1, +2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் டிச. 17ஆம் தேதிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அரசு சேவை மையங்களில் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

News December 6, 2024

வாடகை கொடுக்கவே கஷ்டப்பட்டோம்

image

பிரபல தொகுப்பாளினி மணிமேகலை புதிதாக வீடு வாங்கியது குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில், திருமணமான முதல் ஆண்டில் ₹10,000 வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டதாகவும், தற்போது சென்னையின் முக்கியப் பகுதியில் பிரீமியம் அப்பார்ட்மென்ட் வாங்கி இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். வீடு வாங்குவது தங்கள் கனவாக இருந்ததாகவும், அதை கடவுள் பரிசாக வழங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

News December 6, 2024

‘பிட்காயின்’ மதிப்பு ₹84 லட்சமாக உயர்வு… காரணமென்ன?

image

கிரிப்டோகரன்சி மெய்நிகர் நாணயங்களில் ஒன்றான, ‘பிட்காயின்’ மதிப்பு, முதன் முறையாக ஒரு லட்சம் டாலரை (₹84 லட்சம்) கடந்துள்ளது. கிரிப்டோ ஆலோசனை கவுன்சில் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்திருப்பதே இந்த மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணமென சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதும், இந்த மின்னணு கரன்சிகளின் மதிப்பு மேலும் பல மடங்கு உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 6, 2024

விரும்பிய பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கலாம்: UGC

image

UG, PG பட்டப்படிப்புகளில் முந்தைய பாடப்பிரிவு அல்லாமல், எந்த பாடப்பிரிவையும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம் என UGC அறிவித்துள்ளது. +2, UG பட்டப்படிப்புகளில் அறிவியல் சார்ந்த பிரிவை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் உயர் கல்வியில் அதே பாடப்பிரிவில் மட்டுமே சேர முடியும். இந்த விதிமுறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தன் விருப்பத்திற்கு ஏற்ப வேறு பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

News December 6, 2024

2வது BGT டெஸ்ட்: எப்போது, எதில் நேரலையில் காணலாம்

image

BGT தொடரின் 2-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்குகிறது. இந்த பகலிரவு ஆட்டத்தில் Pink நிற பந்து உபயோகிக்கப்படுகிறது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியை டிஸ்னி ஹாட்ஸ்டார் நேரலை செய்கிறது. முதல் டெஸ்டின் வெற்றியை மீண்டும் தொடரும் முன்னைப்பில் இந்தியாவும், இப்போட்டியில் வெற்றி பெற்று முன்னிலையை சமன் செய்யும் முனைப்பில் ஆஸி.யும் உள்ளது. எந்த அணி வெல்லும் என நினைக்குறீர்கள்…

error: Content is protected !!