India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செர்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச், தனது உணவில் விஷம் கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி போடாததால் 2022 ஆஸி. ஓபனில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. ஆஸியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், ஆஸி.யில் இருந்து வெளியேற்றப்படும் முன்பு மெல்பேர்னில் தங்க வைக்கப்பட்டபோது, தனது உணவில் விஷம் கலக்கப்பட்டதாகவும், இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
பனையூரில் நடக்கும் TVK மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை. புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் நியமனம், கட்சி உட்கட்டமைப்பு குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. அமைப்பு ரீதியாக 105 முதல் 110 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக வெளியான ஆடியோ குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
சென்னையில் 1 கிராம் தங்கம் நேற்று ரூ.7,260க்கு விற்கப்பட்டது. 1 சவரன் தங்கம் ரூ.58,080க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 1 கிராம் தங்கம் விலை இன்று ரூ.25 உயர்ந்து ரூ.7,285க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 1 சவரன் தங்கம் ரூ.200 அதிகரித்து ரூ.58,280க்கு விற்கப்படுகிறது. 1 கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து, ரூ.101ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.1,000 அதிகரித்து, ரூ.1,01,000ஆகவும் விற்கப்படுகிறது.
‘இவன்தான் அந்த சார்’ என அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி சதீஷ் படத்துடன் திமுக MLAக்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். கடந்த சில நாள்களாக அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் ‘யார் அந்த சார்’ என்ற பதாகை, பேஜ்ஜூடன் அதிமுகவினர் DMKவுக்கு அழுத்தம் தந்தனர். இந்நிலையில், அதிமுகவுக்கு பதிலடியாக திமுக ‘இவன் தான் அந்த சார்’ பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெறும் ENGக்கு எதிரான ODI தொடரில் KL ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது. இத்தொடரில் இருந்து அவர் ஓய்வெடுக்க உள்ளதாக BCCI அதிகாரி ஒருவர் கூறினார். BGTல் விளையாடிய ராகுல், சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராவதற்காக ODIக்கு தன்னை பரிசீலிக்க வேண்டாமென கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார். எனினும், சாம்பியன்ஸ் டிராபியில் சாம்சன், பண்ட் ஆகியோரிடமிருந்து ராகுல் கடும் போட்டியை எதிர்கொள்கிறார்.
பெரியார் குறித்து அவதூறாகப் பேசிய சீமான் மீது 11 மாவட்டங்களில் இதுவரை 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தி.க., தபெதிக, விசிகவினர் அளித்த புகார்களின் அடிப்படையில் கடலூர், தென்காசி, சேலம், மதுரை, நெல்லை, திண்டுக்கல், கரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவொருபுறம் இருக்க சீமானை கண்டித்து சோஷியல் மீடியாவில் சிலர் ஒருமையில் வசைபாடி வருகின்றனர்.
ரேஷனில் பாமாயிலை மலிவு விலையில் மக்களுக்கு அரசு அளிக்கிறது. இந்நிலையில், பாமாயில் பாக்கெட்டுகளில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதியில்லை என புகார் எழுந்துள்ளது. பொருள்களின் தரத்தை உறுதி செய்ய அந்தத் தேதிகளை பார்த்து வாங்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. அப்படியிருக்கையில், அரசு வழங்கும் பாமாயிலில் உற்பத்தி தேதி, காலாவதி தேதியில்லாதது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
CRPFஇல் இருந்து ஓய்வு பெறும் 4 கால் வீரர்கள் முதல்முறையாகப் பொதுமக்களுக்குத் தத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்கள் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ளன. இந்நிலையில், பணி ஓய்வு பெறும் பெல்ஜியன் ஷெப்பர்ட், ஜெர்மன் ஷெப்பர்ட், லாப்ரடார், உள்நாட்டு வகையான முதோல் இன வேட்டை நாய்கள் <
விஷால் விரைவில் சிங்கம் போல மீண்டு வருவான் என்று ஜெயம் ரவி நம்பிக்கை தெரிவித்துள்ளார். விஷால் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அவனை விட ஒரு தைரியசாலி யாரும் கிடையாது என்றார். அவன் இப்போது ஒரு மோசமான கட்டத்தில் இருப்பதாகவும், அவனுடைய தைரியம் அவனை காப்பாற்றும் என்றும் கூறியுள்ளார். அவனுடைய நல்ல மனசுக்கும், அவனது குடும்பத்தினரின் நல்ல மனசுக்கும், சீக்கிரம் மீண்டு வருவான் என்றார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, TN முழுவதும் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பு நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கார்டுதாரர்களுக்கு டபுள் டமாக்காவாக, பரிசுத் தொகுப்போடு இலவச வேட்டி, சேலையும் வழங்கப்படுகிறது. இதன்மூலம், அலைச்சலின்றி ஒரேநேரத்தில் கார்டுதாரர்கள் பரிசுத் தொகுப்பு, வேட்டி, சேலையை பெற்றுக்கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.