India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
12 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும், அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கவும், மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் ஆலோசகராக (mentor), தோனி நியமிக்கப்படலாம் என்ற செய்தி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அவர் ஏற்கெனவே 2021 T20 WC-ல் ஆலோசகராக இருந்துள்ளதால், அது உண்மையாக இருக்கலாம் என ரசிகர்கள் பலரும் நம்புகின்றனர். ஆனால், இதுகுறித்து BCCI தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை இல்லை. தோனி mentor ஆக வந்தால் இந்திய அணிக்கு பயனளிக்குமா?
எக்ஸ்ஸாமில் இருந்து தப்பிக்க பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த +2 மாணவனை போலீசார் கைது செய்தனர். கடந்த சில வாரங்களாக தலைநகர் டெல்லிக்கு தலைவலியாக இருந்த வெடிகுண்டு மிரட்டலை தீவிரமாக விசாரித்த போலீசார், சிறுவனை தற்போது கைது செய்துள்ளனர். இவர், இதுவரை 6 முறை இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்ததும், ஒரே முறை 23 பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இத பத்தி உங்க கமெண்ட் என்ன?
ரயிலில் சில நிமிடங்களில் விற்றுத் தீரும் தட்கல் டிக்கெட்டுகளை ஈஸியாக புக் பண்ண இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க. *அதிவேக Internet உள்ள பகுதியில் இருங்கள். *ACக்கு காலை 9.58க்குள்ளும், Sleeperக்கு 10.58க்குள்ளும் IRCTCயை லாகின் செய்து உள்ளே சென்றுவிடுங்க. *Captcha Codeஐ கவனமாக Enter செய்யுங்க.*கிரெடிட் கார்டை வைத்து புக் செய்வதை விட, IRCTC ewallet (அ) UPI மூலம் விரைவாக புக் செய்யலாம். Happy Pongal..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. பொங்கல் பண்டிகை விடுமுறையால், இன்றும், ஜன.13, 17ல் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும். தொடர்ந்து, ஜன.18ல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஜன.20ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். இந்நிலையில், இன்று முதல் ஆளாக சுயேட்சையாக போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
பெண்ணை பின்தொடர்ந்தால் பிணையில் விடுவிக்காதபடி, 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தத்தை பேரவையில் CM ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார். அதில், பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தால் 3 முதல் 5 ஆண்டுகளை வரை சிறை தண்டனை விதிக்கவும், ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையிலும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
யுவராஜ் சிங் கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வந்ததற்கு விராட் கோலி தான் காரணம் என ராபின் உத்தப்பா குறை கூறியுள்ளார். கேன்சரில் இருந்து மீண்டுவந்த யுவராஜுக்கு Fitness தேர்வில் எந்த தளர்வும் அளிக்கப்படவில்லை. அவராகவே தேர்வுபெற்றார். எனினும் நுரையீரல் திறன் குறைந்ததாக கூறி, கோலி அவரை வெளியேற்றினார். கேன்சரை வென்றதே பெரிய போராட்டம். ஒரு கேப்டனுக்கு டீமை எப்படி நடத்துகிறோம் என்பது முக்கியம் என்கிறார்.
கவர்னர் RN.ரவியை நீக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ஜெய்சுகின் என்பவர் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளார். கவர்னரின் செயல்பாடுகள் அரசியலமைப்புக்கு எதிராக உள்ளதால் அவரை நீக்க வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். கவர்னர் – TN அரசு இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. அண்மையில், சட்டப்பேரவையில் அரசின் உரையை வாசிக்காமல் கவர்னர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர்கள் வாரம் 40 மணி நேரம் வேலை செய்தே, L&T நிறுவனத் தலைவர் சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் ₹51 கோடியாக உள்ளது என MP சு.வெங்கடேசன் சாடினார். அவர் மேலும் லாபமடைய தொழிலாளர்களை 90 மணி நேரம் உழைக்கச் சொல்வதாகவும் குற்றஞ்சாட்டினார். தொழிலாளர்களின் இணையர்களை கொச்சைப்படுத்தும் துணிவை தங்களுக்கு எந்த லாபவெறி கொடுத்ததோ, அந்த வெறியை முறிக்கவே உழைப்பாளரின் உரிமையை உலகம் போற்றிப் பாதுகாப்பதாக கூறினார்.
அரசு அலுவலகம், பள்ளிகளுக்கு அடுத்தடுத்து 8 நாள்கள் விடுமுறை வருகிறது. அதாவது, நாளை (டிச.11), நாளை மறுநாள் (டிச.12) விடுமுறை. டிசம்பர் 13ஆம் தேதி திங்கள்கிழமை வேலை நாள். பின்னர் பொங்கலையொட்டி 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதையடுத்து டிசம்பர் 18 சனி, 19 ஞாயிறு ஆகிய நாள்கள் விடுமுறை ஆகும். இதனால் மாநிலத்தில் அடுத்தடுத்து 8 நாள்கள் விடுமுறை வருகிறது.
Sorry, no posts matched your criteria.