India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
NTK ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்துகள் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு HC மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பெரியார் பற்றி அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாநிலம் முழுவதும் திமுகவினர் அவர் மீது புகார் அளித்தனர். இந்நிலையில் நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. இதனால், சீமான் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
சஹால்- தனஸ்ரீ விவாகரத்து செய்யப் போவதாக வெளியான சர்ச்சை ஓய்வதற்குள், இன்னொரு கிரிக்கெட் பிரபலமும் மனைவியை பிரிவதாக தகவல் பரவி வருகிறது. மனிஷ் பாண்டேவும், அஷ்ரிதா ஷெட்டியும், இன்ஸ்டாகிராமில் ஒருவருக்கொருவர் follow செய்வதை நிறுத்தி விட்டனராம். ஒன்றாக எடுத்த photos-ஐ இருவரும் டெலிட் செய்ததே, டைவர்ஸ் குறித்த தகவல் பரவ காரணமாக அமைந்துள்ளது. இருவருக்கும் கடந்த 2019ல் திருமணம் நடந்தது.
திருப்பதியில் கூட்டநெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆந்திரா DY CM பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபிக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், சாதாரண பக்தர்களை புறக்கணிப்பதும் தொடர்கதையாகி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சாமானிய பக்தர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ODI போட்டியில், 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது. 239 ரன்கள் என்ற இலக்கை 34.3 ஓவர்களிலேயே கடந்து அயர்லாந்துக்கு தோல்வியை பரிசளித்துள்ளது. அதிகபட்சமாக பிரதிகா ரவால் 89 ரன்களையும், தேஜல் 53 ரன்களையும் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர். 3 போட்டிகளை கொண்ட இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
சினிமா பார்க்கவும், சிரிக்கவும் கூட வடகொரியாவில் தடை இருப்பதை அறிவோம். இந்நிலையில், தற்போது அங்கு விவகாரத்து கோருவதை தடுக்கும் வகையிலும், அதிபர் கிம் ஜாங் உன் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விவாகரத்து கோரும் தம்பதிகளை 6 மாதங்கள் வரை சிறைக்கு அனுப்பவும், அங்கு கடுமையான வேலைகளை வழங்கியும், உணவு வழங்காமலும் சித்ரவதை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதித்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் புகழேந்தி மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், அதிமுக பொதுச்செயலாளர், பொதுக்குழு உள்ளிட்ட கட்சி விவகாரங்களில் உண்மைக்கு மாறான தகவல்களை அளித்து தடை உத்தரவு பெற்றுள்ளதாக புகழேந்தி குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சூர்யமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் இபிஎஸ் உள்ளிட்டோருக்கு EC நோட்டீஸ் அனுப்பியது.
தேசியப் பறவையாக இருக்கும் மயில்தான், விவசாயிகளுக்கு பிரதான எதிரியாகவும் உள்ளது. விவசாய நிலங்களை சேதப்படுத்துவதில் மயில்களின் பங்கு அதிகம். ஆனால், மயில்களை கொல்ல சட்டம் அனுமதிப்பதில்லை. இந்நிலையில், மயில்களின் உற்பத்தியை குறைக்க மயில் முட்டைகளை உடைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் Ex அமைச்சர் செங்கோட்டையன் யோசனை தெரிவித்தார். மயில் முட்டைகளை அழிப்பதும் சட்டப்படி குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
”எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்?” என்று முதல்வர் ஸ்டாலினின் அதே கேள்வியை EPS இன்று முதல்வரிடமே கேட்டார். 2020ஆம் ஆண்டு திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அது அரசியல் செய்வதாக EPS பேசியிருந்தார். அதற்கு ஸ்டாலின் அப்போது இந்த பதிலை அளித்தார். இன்று சட்டப்பேரவையில் EPS அரசியல் செய்வதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியபோது EPS அதே பதிலை கொடுத்து அதிர வைத்தார்.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதையொட்டி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதையும் மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், அரசு பஸ் எனில், 9445014436, தனியார் ஆம்னி பஸ் எனில் 18004256151, 04424749002, 04426280445, 04426281611இல் புகார் தெரிவிக்குமாறு அரசு கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.