News January 11, 2025

கூடுதல் கட்டணமா… உடனே இந்த நம்பருக்கு அழைக்கவும்

image

பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களை 1800-425-6151 ( Toll Free Number) மற்றும் 044-24749002, 044 -26280445, 044-26281611ஆகிய எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம். அதேபோல், அரசு பேருந்து இயக்கம் குறித்து, 9445014436 என்ற தொலைபேசி எண்ணில் (24 ×7) மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

News January 11, 2025

ஈரோடு கிழக்கில் விஜயகாந்த் மகன் போட்டி?

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமான சந்திரகுமார் போட்டியிடுகிறார். இதனால், அவருக்கு எதிராக தங்கள் கட்சி வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்று இபிஎஸ்-யிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாராம். இபிஎஸ் இசைவு தெரிவித்தால், விஜய பிரபாகரன் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News January 11, 2025

வேலையை விட்டு விவசாயத்தில் ஈடுபட ஆசை

image

திருச்சி மாவட்டம் முசிறி எம்ஐடி வேளாண் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆளுநர் ரவி பங்கேற்றார். நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், தனது ஆளுநர் வேலையை விட்டுவிட்டு, விவசாயத்திற்கு சென்றுவிடலாம் என ஆசைப்படுவதாக கூறினார். மேலும், தானும், தனது மனைவியும் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என குறிப்பிட்ட ஆளுநர், உலகுக்கே உணவு கொடுப்பவர்கள் விவசாயிகள் எனவும் புகழாரம் சூட்டினார்.

News January 11, 2025

சற்றுமுன்: மண்ணுலகை விட்டு மறைந்தார்

image

கடந்த வியாழனன்று மறைந்த பின்னணி பாடகர் ஜெயச்சந்திரனின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. அவரது சொந்த ஊரான செண்டமங்களத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த உடலுக்கு ஏராளமான ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்குகள் முடிந்து, பிற்பகல் 1:00 மணிக்கு, பாலியம் தரவாட்டில் அவரது உடல் எரியூட்டப்பட்டது. 50 ஆண்டுகளாக ரசிகர்களை மகிழ்வித்த அவரின் குரல் காற்றில் கலந்தது.

News January 11, 2025

இடைத்தேர்தலில் OPS அணி போட்டி?

image

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் OPS, கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் அணி போட்டியிடுமா என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்” என்று கூறிச் சென்றார். என்ன செய்யப் போகிறது பாஜக?

News January 11, 2025

2025ல் இவர்களின் Salary Hike குறையலாம்!

image

MNC ஊழியர்களே 2025ல் உங்களின் Salary Hike குறையலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் நிதி நிச்சயமற்ற நிலையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. Deloitte India தரவுப்படி, மற்ற நிறுவனங்களை விட GCC Salary Hike-ஐ அதிகரித்துள்ளது. எனினும், கடந்தாண்டை விட அதன் சதவீதம் குறைவாக உள்ளது. கடந்தாண்டு IT Product நிறுவனங்கள் 10% Hike அளித்த நிலையில், இந்தாண்டு அது 9% ஆக குறையலாம்.

News January 11, 2025

‘படைத்தலைவன்’ பட ரிலீஸ் செக் வைத்த நீதிமன்றம்

image

பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சண்முகபாண்டியனின் ‘படைத்தலைவன்’ படம் ஜன.24ம் தேதிக்கு முன்னர் வெளியிடப்படமாட்டாது என நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. வெளிநாட்டு உரிமை தொடர்பாக ஸ்மார்ட் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்ந்த வழக்கை அடுத்து, நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் தேதியை தள்ளிவைப்பதாக தெரிவித்துள்ளது.

News January 11, 2025

புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு HMPV உறுதி

image

புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜிப்மர் ஹாஸ்பிட்டல் தெரிவித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் HMPVயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே, TNல் 2 குழந்தைகள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது புதுச்சேரியிலும் சிறுமி ஒருவர் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

News January 11, 2025

உங்கள் வீட்டுக்கடனை எளிதாக அடைக்க ‘5’ டிப்ஸ்

image

*அவ்வப்போது, EMI தொகையை அதிகரித்து கட்டவும். அது வட்டியை குறைக்க உதவும் *காசு அதிகம் என்றாலும், குறைவான EMI கால அவகாசத்தை தேர்ந்தெடுக்கவும். மொத்த தொகையில் அது வட்டியை குறைக்கும் *கடன் வாங்கும் போது, முடிந்தால் 20% அதிகமாக Down Payment செய்திடுங்கள் *வருடத்திற்கு ஒரு முறை Pre-payments செய்திடுங்கள். அது அசலை நேரடியாக குறைக்கும்.
*EMI கட்டுவதை எப்போதும் தவறவிடாதீர்கள்.

News January 11, 2025

அதிமுக முடிவுக்காக காத்திருக்கும் பாஜக

image

ஈரோடு (கி) இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ADMKவின் முடிவுக்காக BJP காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ADMK இடைத்தேர்தலில் போட்டியிட்டால், BJP போட்டியிடாது எனவும் ADMK போட்டியிடாவிட்டால் BJP போட்டியிட உள்ளதாகவும் தெரிகிறது. DMK vs BJP என்ற நிலையை உருவாக்க பாஜக தலைமை விரும்புவதாகவும், அந்த சூழல் ஏற்பட்டால், முதல் 2 இடங்களில் ஒன்றை பிடிக்கலாம் என திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!