News January 11, 2025

இடைத்தேர்தலில் OPS அணி போட்டி?

image

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் OPS, கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் அணி போட்டியிடுமா என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்” என்று கூறிச் சென்றார். என்ன செய்யப் போகிறது பாஜக?

Similar News

News November 8, 2025

மதுவிலக்கை வலியுறுத்தி வைகோ நடைபயணம்

image

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தவும், போதைப் பொருள்கள் பயன்பாட்டை எதிர்த்தும் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக வைகோ அறிவித்துள்ளார். மதுவின் பிடியில் இருந்து இளைய தலைமுறையினரை மீட்டு எடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த சமத்துவ நடைபயணம் இருக்கும் என அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு ஜன.2-ல் தொடங்கும் இந்த நடைபயணத்தை மதுரையில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் வைகோ பேசியுள்ளார்.

News November 8, 2025

அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி: வீரலட்சுமி

image

தவெக செய்த ரெளடிசமே கரூரில் 41 பேர் உயிரிழக்க காரணம் என தமிழர் முன்னேற்ற படை வீரலட்சுமி சாடியுள்ளார். அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி என விமர்சித்த அவர், களத்தில் நின்று மக்களை காப்பாற்றுபவர்களே நிஜ ஹீரோ என்றும், கரூர் துயருக்கு பிறகு தவெகவில் அனைவருமே ஓடி ஒளிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும், மக்களுக்காக புரட்சிகரமான போராட்டம் நடத்தி, விஜய் சிறை செல்ல தயாரா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

News November 8, 2025

சிவப்பு ரோஜாவாக சிலிர்ப்பூட்டும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

image

விக்ரம் வேதா, இறுகப்பற்று படங்களில் கவனம் ஈர்த்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை போட்டோஷூட் பிரியர் என்றே சொல்லலாம். வாரத்திற்கு 2-3 முறை புது புதிதாக போட்டோக்களை SM-ல் பதிவிடுவார். இந்நிலையில், சிவப்பு நிறத்தில் சற்று கவர்ச்சிகரமான ஆடை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதை SM-ல் அவர் பதிவிடவே சிவப்பு ரோஜாவாக சிலிர்ப்பூட்டுகிறீர்கள் என கமெண்ட் செய்கின்றனர். போட்டோக்களை SWIPE செய்து பார்க்கவும்.

error: Content is protected !!