India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேந்திரிய வித்யாலயாக்களில் பொங்கல் விழா நாளில் தேர்வுகள் நடத்தக்கூடாது என MP சு.வெங்கடேசன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். KV பள்ளிகளில் 6 -11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொங்கல் விழா நாள்களான ஜன.16,17 & 18ல் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், திருவிழா கால விடுமுறையை மாணவர்கள் கொண்டாட விடாமல் உளவியல் தாக்குதல் நடத்துவதாக சாடிய அவர், இத்தேர்வுகளை மறுதேதிக்கு மாற்றும்படியும் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுகிறதா என்பது குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. இதற்காக பாஜக உறுப்பினர்கள் 3 பேரை தேர்வு செய்து பட்டியலை பாஜக மேலிடத்திற்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், டிடிவி தலைமையிலான அமமுக, ஓபிஎஸ், தமாக தலைவர் ஜி.கே.வாசனுடனும் பாஜக ஆலோசித்து வருகிறதாம். தற்போது வரை, இடைத்தேர்தலில் திமுக, நாதக களம் காணுவது உறுதியாகியுள்ளது.
நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர், BGT டிராபி போன்ற தொடர் தோல்விகளால் BCCI நிர்வாகத்தினர் கடும் மன உளைச்சலில் உள்ளனர். இது குறித்த மறுஆய்வுக் கூட்டம் மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில், இனி இந்திய அணியின் வீரர்கள் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப தொடரில் இருந்து விலக அனுமதிக்கப்பட மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அண்மையில் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர், தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வருகிற 17ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளதாக திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கையில் போனை வைத்து சும்மா பொழுதை போக்க ரீல்ஸ் பார்ப்பதை கொஞ்சம் நிறுத்தி விட்டு, கண்ணுக்கும் மூளைக்கும் வேலை கொடுப்போம் வாங்க! இந்த படத்தில் இருக்கும் நம்பரை சரியாக கமெண்ட் பண்ணுங்க பார்ப்போம். இது போன்ற சில புகைப்படங்களை உத்து பார்க்கும் போது, கண்ணின் நரம்புகளுக்கு வேலை கிடைக்கும் என்கிறார்கள். ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க. உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்க.
பற்றி எரியும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஓனர் ப்ரீத்தி ஜிந்தாவும் சிக்கி இருக்கிறார். தனது வீட்டை சுற்றி இருப்பவர்கள் வேறு வழியின்றி வீட்டை காலி செய்து வெளியேறியதாகவும், இப்படியொரு நாளை காண வாழ்வேன் என நினைத்ததில்லை என்று வேதனையில் பதிவிட்டுள்ளார். தீயணைப்பு துறையினருக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ள அவர், தற்போதைக்கு தான் பத்திரமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று MET எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளது. 15ஆம் தேதி தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் MET கணித்துள்ளது. SHARE IT.
பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சுக்காக சீமான் மீது திகவினர் அளித்த புகார்களின் மீது காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பெரியார் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். பெரியார் என்ன புரட்சி செய்தார் எனவும், ராஜாஜியுடனும், ஜனசங்கத்துடனும் கூட்டணி வைத்தது ஆர்யம் இல்லையா என்றும் கேள்வியெழுப்பினார்.
1 கிராம் தங்கம் கடந்த திங்கள்கிழமை ரூ.7,215ஆகவும், சவரன் ரூ.57,720ஆகவும் இருந்தது. அதன்பிறகு செவ்வாய், புதன் அன்று அதே விலையில் தங்கம் விற்கப்பட்டது. ஆனால் புதன், வியாழன், வெள்ளி, சனி என 4 நாள்களும் விலை அதிகரித்தது. அதன்படி 4 நாள்களில் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.7,315க்கும், சவரன் ரூ.800 அதிகரித்து ரூ.58,520க்கும் நேற்று விற்பனையானது. இன்றும் அதே விலையிலேயே விற்கப்படுகிறது.
என்னுடைய அரசியல் வாழ்க்கையில் ‘வேர்களைத் தேடி’ திட்டம் ஒரு மைல் கல் என ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “பல நூறு ஆண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்த தமிழர்களின் வழித்தோன்றல்களை தமிழகம் அழைத்து வந்து வேர்களை அடையாளம் காட்டும் திட்டம்தான் இது. இத்திட்டத்தில் தமிழகம் வந்த பலர் தங்களது சொந்தங்களை கண்டுபிடித்து கண்ணீர் மல்கிய சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் நடந்துள்ளன” என்றார்.
Sorry, no posts matched your criteria.