News January 12, 2025

தங்கம் விலை 4 நாள்களில் சவரனுக்கு ரூ.800 உயர்வு

image

1 கிராம் தங்கம் கடந்த திங்கள்கிழமை ரூ.7,215ஆகவும், சவரன் ரூ.57,720ஆகவும் இருந்தது. அதன்பிறகு செவ்வாய், புதன் அன்று அதே விலையில் தங்கம் விற்கப்பட்டது. ஆனால் புதன், வியாழன், வெள்ளி, சனி என 4 நாள்களும் விலை அதிகரித்தது. அதன்படி 4 நாள்களில் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.7,315க்கும், சவரன் ரூ.800 அதிகரித்து ரூ.58,520க்கும் நேற்று விற்பனையானது. இன்றும் அதே விலையிலேயே விற்கப்படுகிறது.

Similar News

News November 17, 2025

இன்னும் 3 நாள்களில் புதிய கட்சி: மல்லை சத்யா

image

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, நவ.20-ல் புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சரியான நேரத்தில் தவறான முடிவை எடுக்கும் தலைவராக வைகோ இருந்தார் என்றும் சாடினார். மேலும், 2016 தேர்தலின்போது மக்கள் நலக் கூட்டணி உருவானதில் பல ரகசியங்கள் உள்ளதாக கூறிய அவர், அதை தற்போது சொல்ல முடியாது என சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

News November 17, 2025

தஞ்சை: மழையா? இதை மறக்காதீங்க!

image

தஞ்சை மக்களே, தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மழையால் பவர் கட், மின்கம்பி அறுந்து விழுவது, பியூஸ் போவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். ‘94987 94987’ என்ற மின்வாரிய உதவி எண்னை தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், தமிழகத்தில் எங்கு இருந்தாலும் பழுது நீக்கி தரப்படும்! SHARE

News November 17, 2025

திருப்பத்தூர்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை செய்தி

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை மாவட்ட மக்களுக்கு இன்று (17-11-2015) வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் மக்களுக்கான சைபர் குற்ற விழிப்புணர்வு செய்தி :-STOCK MARKET-ல் பணம் முதலீடு போட்டா 2 மடங்கு லாபம் என்று செய்தியில் வரும் போலி லிங்க் மற்றும் போலி அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தி உள்ளது.

error: Content is protected !!