News October 12, 2025
சிரித்தே மயக்கும் சித்தி இத்னானி!

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் கவனம் ஈர்த்த சித்தி இத்னானி தற்போது தெலுங்கு, குஜராத்தி, இந்தி படங்களில் பிஸியாக இருக்கிறார். எனினும் தமிழ் ரசிகர்களுக்காக அவ்வப்போது போட்டோஷுட் நடத்தி SM-ல் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், கன்னத்தில் குழி விழும் அளவிற்கு சிரித்து மகிழ்ந்த புகைப்படங்களை அவர் பகிர, சிரித்தே மயக்கிவிடுகிறீர்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.
Similar News
News October 12, 2025
சளி, இருமலை போக்க இந்த மூலிகை தேநீர்தான் பெஸ்ட்!

கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி டீ தூள் போட்டு கொதிக்க வையுங்கள். பின் கற்பூரவள்ளி இலைகளை சேருங்கள். அதில் தோல் நீக்கிய இஞ்சி (சிறு)துண்டுகள், மிளகு மற்றும் ஏலக்காயை தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின் அதை வடிகட்டிக்கொள்ளவும். மிதமான சூட்டில், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடியுங்கள். இது சளி, இருமலுக்கு சிறந்த நிவாரணமாகும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News October 12, 2025
‘அதிமுகவுடன் விஜய் கூட்டணி இல்லை’

அதிமுக கூட்டணிக்கு விஜய் ஒருபோதும் செல்ல மாட்டார் என்று பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். ‘அதோ பாருங்கள் கொடி’ என தவெக கொடியை காண்பித்து இபிஎஸ் அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டிய அவர், சொந்த கட்சிக்காரர்களை (அதிமுகவினர்) அடுத்த கட்சியின் கொடியை பிடிக்க செய்யும் அவமானம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளதாக சாடினார். இபிஎஸ் இருக்கும் வரை விஜய் கூட்டணிக்கு வர வாய்ப்பே இல்லை என்றார்.
News October 12, 2025
தங்கம் விலை புதிய RECORD.. இதுவே முதல்முறை

தங்கம் விலை தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடி வருகிறது. காலை, மாலை என நாளொன்றுக்கு 2 முறை மாற்றம் கண்டு வருவதால் நடுத்தர மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த வாரத்தின் வர்த்தக முடிவில் ஒரே நாளில் சவரனுக்கு ₹1,280 உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சமாக ₹92,000-ஐ தொட்டுள்ளது. தங்கத்தை காட்டிலும் பந்தயத்தில் முன்னேறும் வெள்ளி 1 கிராம் ₹190-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,90,000-க்கும் விற்பனையாகிறது.