News October 12, 2025
‘அதிமுகவுடன் விஜய் கூட்டணி இல்லை’

அதிமுக கூட்டணிக்கு விஜய் ஒருபோதும் செல்ல மாட்டார் என்று பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். ‘அதோ பாருங்கள் கொடி’ என தவெக கொடியை காண்பித்து இபிஎஸ் அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டிய அவர், சொந்த கட்சிக்காரர்களை (அதிமுகவினர்) அடுத்த கட்சியின் கொடியை பிடிக்க செய்யும் அவமானம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளதாக சாடினார். இபிஎஸ் இருக்கும் வரை விஜய் கூட்டணிக்கு வர வாய்ப்பே இல்லை என்றார்.
Similar News
News December 17, 2025
எந்த சீட்டில் உட்காருவீங்க?

நீங்க விமானத்திலோ, பஸ்சிலோ ஏதோ ஒரு பொது போக்குவரத்தில் டிக்கெட் புக் பண்றீங்க. வண்டியில் ஏறி உள்ளே அமர செல்லும் போது, இவங்கெல்லாம் இதே போல ஆளுக்கு ஒரு சீட்டில் உட்கார்ந்திருக்காங்க. நீங்க எந்த சீட்டில் வேணாலும் உட்காரலாம். ஆனால், ஒரு சீட்டில் மட்டுமே இறங்கும் வரை உட்காரணும். இந்த Situation-ல் எந்த சீட்டில் போய் உட்காருவீங்க? அவங்க கூட என்ன பேசுவீங்க.. மறக்காம கமெண்ட் பண்ணுங்க?
News December 17, 2025
Impact வீரராக ஆடப்போகிறாரா தோனி?

2026 IPL சீசனுடன் தோனி ஓய்வு பெறுவார் என Ex CSK வீரர் உத்தப்பா கூறியுள்ளார். அணியின் எதிர்கால நலன்கருதி ஏலத்தில் கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர் மீது CSK கோடிகளை கொட்டியது. Mhatre, Samson, Ruturaj, Dube, Brevis என பக்காவாக டாப் 5 செட் செய்துள்ள CSK, அடுத்தடுத்த வரிசைகளில் புதிய வீரர்களை களமிறக்கவுள்ளதாம். இதனால் ஃபினிஷிங் ரோலில் தேவைக்கு ஏற்ப, IMPACT வீரராக தோனி களமிறங்குவார் என கூறப்படுகிறது.
News December 17, 2025
சிம்புவை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்?

இடையில் கொஞ்சம் சறுக்கினாலும், சிம்பு தனது Comeback-ஐ கச்சிதமாக பிளான் செய்து வருகிறார். வெற்றிமாறனுடன் ‘அரசன்’, அஸ்வத் மாரிமுத்துவுடன் ‘STR 51’ படங்களை முடித்தவுடன் அவர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையவுள்ளார் என கூறப்படுகிறது. ஆம், ‘மதராஸி’ படத்திற்கு பிறகு, அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம். எப்படி இருக்கும் இந்த காம்போ?


