News August 10, 2025

ஆகஸ்ட் 10: வரலாற்றில் இன்று

image

*610 – முகம்மது நபி குர்ஆனை அளித்த நாள். 1741 – குளச்சல் போர்: திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் படையினரைத் தோற்கடித்தார். *1916- தமிழ் எழுத்தாளரும், இதழாசிரியருமான சாவி பிறந்தநாள். *1948 –இந்திய அணுசக்திப் பேரவையை ஜவகர்லால் நேரு துவக்கி வைத்தார். *1990- நாசாவின் மெகலன் விண்கலம் வெள்ளி கோளை அடைந்தது.

Similar News

News August 10, 2025

நீதியில் கர்நாடகா, சிறையில் தமிழ்நாடு

image

நாட்டில் நீதி வழங்குவதில் கர்நாடகமும், சிறைத்துறையில் சிறந்த மாநிலமாக தமிழகமும் முதலிடத்தை பிடித்துள்ளன. 18 மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்திய நீதி அறிக்கை (IJR) ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. நீதி, காவல், சிறை, சட்ட சேவைகள் ஆகியவற்றில் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு, மனிதவளம், வேலை பளு, கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

News August 10, 2025

தவெக கூட்டணியில் இல்லை: பாஜக திட்டவட்டம்

image

புதுவையில் NDA கூட்டணியில் தவெக இல்லை என பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளார். புதுவை பாஜக உயர்மட்ட குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவரிடம், தவெக கூட்டணியில் இடம்பெறுமா என நிர்வாகிகள் கேட்டனர். விஜய் கூட்டணிக்கு வருவார் என எண்ணி தேர்தல் பணியாற்ற வேண்டாம் என்றார். NDA கூட்டணியில் பாஜக, அதிமுக, NR காங்கிரஸ் மட்டுமே இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

News August 10, 2025

தமிழக மீனவர்கள் 7 பேரை விடுவிக்கக் கோரி கடிதம்

image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த 7 மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், வாழ்வதாரத்துக்காக கடலையே நம்பியிருந்த மீனவர்கள் தற்போது சிறைவாசத்தை கண்டு அச்சத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மீனவர்கள் நீண்டகாலம் சிறை வைக்கப்படுவதால் அவர்களது வாழ்வதாரம் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!