News August 21, 2024
கலைத் திருவிழா.. இன்றுடன் அவகாசம் நிறைவு

‘சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு’ என்ற தலைப்பில், அரசு, அரசு உதவிப் பள்ளிகளில் நாளை கலைத் திருவிழா தொடங்குகிறது. 1 முதல் +2 வரை, மாணவர்கள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஓவியம், நடனம், பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆக.30 வரை நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்க, பதிவு செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. உடனே விண்ணப்பியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை பகிருங்கள்
Similar News
News March 18, 2026
ஏன் அமித்ஷா அழைத்து பேசினார்? TTV

அதிமுக, அமமுகவை இணைக்க ஏன் பாஜக மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பதற்கு TTV தினகரன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, அண்ணன் – தம்பி இடையே பிரச்னை ஏற்பட்டால் ஊரில் உள்ள பெரியவர்கள் தீர்த்து வைப்பது போல, தன்னையும் EPS-ஐயும் அமித்ஷா சேர்த்து வைத்தாக அவர் கூறியுள்ளார். மேலும், இருகட்சிகளின் நலனை கருத்தில் கொண்டு அந்த கூட்டணியில் இணைந்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
News March 18, 2026
பெண்கள் வாக்கு திமுகவுக்கு இல்லை: தமிழிசை

தூத்துக்குடி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை இதுவரை கண்டுபிடிக்காதது பெரும் அவலம் என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். திமுகவின் ஆட்சியில் பெண்கள் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் தேர்தலில் பெண்களின் ஓட்டு அவர்களுக்கு கிடைக்காது எனவும் கூறியுள்ளார். பெண்களின் பாதுகாப்புக்கு CM ஸ்டாலின் கொஞ்சம் கூட அக்கறை காட்டவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
News March 18, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 18, பங்குனி 4 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.


