News August 21, 2024

கலைத் திருவிழா.. இன்றுடன் அவகாசம் நிறைவு

image

‘சூழல்‌ பாதுகாப்பு அனைவரின்‌ பொறுப்பு’ என்ற தலைப்பில், அரசு, அரசு உதவிப் பள்ளிகளில் நாளை கலைத் திருவிழா தொடங்குகிறது. 1 முதல் +2 வரை, மாணவர்கள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஓவியம், நடனம், பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆக.30 வரை நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்க, பதிவு செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. உடனே விண்ணப்பியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை பகிருங்கள்

Similar News

News January 21, 2026

ஜன நாயகன் ரிலீஸ்.. காலையிலேயே ஹேப்பி நியூஸ்

image

‘ஜன நாயகன்’ பட சென்சார் சான்று தொடர்பான வழக்கை சென்னை HC தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. அதேநேரம், இன்று (அ) நாளை இதுதொடர்பாக தீர்ப்பு வெளியாகும் என விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்த 2 நாள்களுக்குள் படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் அடுத்த வாரம் (அ) பிப்ரவரி 2-வது வாரத்தில் படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

News January 21, 2026

சர்க்கரையை விரும்பி சாப்பிடுவீங்களா?

image

டீ, காபி சொல்லும்போது, கொஞ்சம் Sugar Extra என சொல்பவரா நீங்க? இதை கொஞ்சம் படிங்க. அதிகப்படியான சர்க்கரை நுகர்வு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக எடை அதிகரிப்பதில் சர்க்கரைதான் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், சர்க்கரை இதயத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் புற்றுநோய், மனச்சோர்வு, கல்லீரல் கொழுப்பு போன்ற பிரச்னைகளும் வரலாம் என டாக்டர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

News January 21, 2026

கூட்டணி இருக்கா? காங்கிரஸ் பதிலால் திமுக அதிர்ச்சி

image

திமுக கூட்டணியில் காங்., நீடிக்கிறதா என்ற கேள்விக்கு காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அகில இந்திய தலைமை முடிவு செய்யும் என்று பதிலளித்துள்ளார். திமுக கூட்டணி குறித்து காங்., தலைவர்களிடம் தலைமை கருத்து கேட்டுள்ளதாக கூறிய அவர், அனைவரும் அவரவர் விருப்பங்களை கூறி உள்ளதால் அதனடிப்படையில் தலைமை முடிவெடுக்கும் என்றார். இவருடைய இந்த பதில் திமுகவிற்கு சற்று அதிர்ச்சியளித்திருப்பதாக பேசப்படுகிறது.

error: Content is protected !!