News October 9, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤தென் கொரியா, USAவுக்கு எதிராக அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என வடகொரியா எச்சரித்துள்ளது. ➤லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி சுஹைல் ஹுசைனி உயிரிழந்தார். ➤உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதில்லை என்று அமெரிக்கா அறிவித்தது. ➤ஹைதி பிரதமர் கேரி கோனிலுக்கு எதிரான செரிசியர் ஆயுதக்குழுவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

Similar News

News August 7, 2025

தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!

image

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோயில் ஆடித்தபசு திருவிழாவையொட்டி இன்று(ஆக.7) தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனால், அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 23-ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News August 7, 2025

8 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

வட தமிழகத்தின் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. அதேபோல், கோவையின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.

News August 7, 2025

‘கிங்டம்’ படத்திற்கு போலீஸ் பாதுகாப்பு?

image

தமிழகத்தில் ‘கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கில் காவல்துறை, நாதக பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இப்படத்தில் ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தியதாக சர்ச்சை எழுந்ததால் நாதக போராட்டத்தை அறிவித்தது. இதையடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டை அணுகியது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்துரிமை உண்டு என கூறி, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!