News September 23, 2024
30 நொடிகளில் உலகைச் சுற்றி…

➤இங்கிலாந்து: ஆக்ஸ்போர்டு பல்கலை. செயல்பாடுகளில் தலையிட்ட சீன ஆதரவு பெற்ற 30 கன்பூசியஸ் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கும் மானியத்தை நிறுத்த இங்கிலாந்து கல்வித்துறை முடிவு. ➤ரஷ்யா: நவம்பரில் உக்ரைன் நடத்தும் 2ஆவது அமைதி உச்சிமாநாட்டில் பங்கேற்க போவதில்லை என ரஷ்யா அறிவிப்பு. ➤அமெரிக்கா: அலபாமா மாகாண பல்கலைக்கழகம் அருகே ஆயுதம் ஏந்திய கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
Similar News
News August 23, 2025
காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

நீண்ட நேரம் இரவில் உணவு இல்லாமல் இருந்த உடல், காலை உணவின் மூலம் புதிய சக்தி பெறுகிறது. ஆதலால் தான் காலை உணவு முக்கியமென மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியமான காலை உணவு உடலுக்கு தேவையான புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஆகிய சத்துக்களை வழங்குகிறது. அதே சமயம் தேவையற்ற காலை உணவும் உடலை கெடுக்கிறது. அவை என்னென்ன என்பதை மேலே கொடுத்துள்ளோம். அதனை Swipe செய்து பார்க்கவும்.
News August 23, 2025
பாக்., குப்பை லாரி கருத்து: ராஜ்நாத் சிங் பதிலடி

இந்தியா “பளபளக்கும் Mercedes” என்றும், பாகிஸ்தான் “குப்பை லாரி” என்றும் பாக்., ராணுவ தளபதி முனீர் அண்மையில் பேசியிருந்தார். இதுபற்றி பேசிய ராஜ்நாத் சிங், ஒரே நேரத்தில் சுதந்திரமடைந்த 2 நாடுகள், கடின உழைப்பு, சரியான கொள்கைகள் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு நாடு Ferrari போன்ற பொருளாதாரத்துடனும், மற்றொன்று குப்பைவண்டி நிலையிலேயே உள்ளது என்றால், அது அவர்களின் சொந்த தோல்வி என விமர்சித்துள்ளார்.
News August 23, 2025
வந்தா CM தானா? விஜய்யை சீண்டிய செல்லூர் ராஜு

தமிழகத்துக்கு ஒரு MGR மட்டும் தான் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். MGR-யை அனைவரும் கொண்டாடலாம், ஆனால் மக்களை பொறுத்தவரை MGR கட்சி என்றால் அது அதிமுக தான் என்றார். அண்ணாவிடம் பல வருடங்கள் அரசியல் பாடம் படித்த பின் தான் MGR அரசியலுக்கு வந்தார். ஆனால் காதல் பட நகைச்சுவை காட்சி போல் வந்தால் CM-ஆக தான் வருவேன் என விஜய் செயல்படுவதாக விமர்சித்தார்.