News May 2, 2024
EVM வைக்கப்பட்டுள்ள பகுதிகள் Red Zoneஆக அறிவிப்பு

சென்னையில் EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை Red ஆகக் காவல்துறை அறிவித்துள்ளது. தில்லுமுல்லு நடைபெறுவதைத் தடுக்க EVM வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது டிரோன் பறக்கத் தடை விதிக்க திமுக கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் EVM வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரி, ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகப் பகுதிகளை Red Zoneஆக அறிவித்து, அவற்றின் மீது டிரோன் பறப்பதற்குக் காவல் ஆணையர் தடை விதித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
மன அழுத்தத்தை குறைக்கும் 6 உணவுகள்!

ஒருவரின் உணவு பழக்கம் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் வடிவமைக்கிறது. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளும்போது உடல் மட்டுமல்ல, மனதுக்கும் அது நன்மையை தருவதாக கூறுகின்றனர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள். சில எளியமையான, அன்றாட உணவுகள் மன அழுத்தத்தை சரி செய்யவும், சமநிலையை பராமரிக்கவும் உதவுவதாக அவர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்பதை அறிய மேலே SWIPE பண்ணி பாருங்க…
News November 16, 2025
மீண்டும் பிஹார் CM ஆகிறாரா நிதிஷ்?

நிதிஷ்குமாரையே பிஹார் CM நாற்காலியில் அமரவைக்க NDA கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவ.19-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் எனவும், இதில் PM மோடி மற்றும் பாஜக CM-கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நிதிஷ் குமார் தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை நடக்கவிருப்பதாகவும் பேசப்படுகிறது. மேலும், DCM-மாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
News November 16, 2025
சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிந்தகுஃபா காவல் நிலைய பகுதியின் கீழ் உள்ள பெஜ்ஜி வனப்பகுதியில் நடந்த மோதலில், முக்கிய மாவோயிஸ்ட் தளபதி உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம், இந்த ஆண்டில் இதுவரை சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது.


