News May 2, 2024

EVM வைக்கப்பட்டுள்ள பகுதிகள் Red Zoneஆக அறிவிப்பு

image

சென்னையில் EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை Red ஆகக் காவல்துறை அறிவித்துள்ளது. தில்லுமுல்லு நடைபெறுவதைத் தடுக்க EVM வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது டிரோன் பறக்கத் தடை விதிக்க திமுக கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் EVM வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரி, ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகப் பகுதிகளை Red Zoneஆக அறிவித்து, அவற்றின் மீது டிரோன் பறப்பதற்குக் காவல் ஆணையர் தடை விதித்துள்ளார்.

Similar News

News December 16, 2025

திட்டங்களின் பெயர்கள் எதுவுமே புரியவில்லை: ஜோதிமணி

image

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஹிந்தி பெயர்களை வைப்பதை எதிர்த்து காங்கிரஸ் MP ஜோதிமணி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். மத்திய அரசின் திட்டங்களின் பெயர் எங்களுக்கு புரியவில்லை என்றும், நாங்கள் தமிழில் பேசினால் உங்களுக்கு புரியுமா எனவும் அவர் கேள்வியெழுப்பினார். ஆங்கிலத்தில் இருந்தால் மட்டுமே அனைவரும் புரியும் என தெரிவித்த அவர், இதையும் ஹிந்தி திணிப்பாகவே பார்ப்பதாகவும் சாடியுள்ளார்.

News December 16, 2025

IPL: எந்த அணியிடம் எவ்வளவு உள்ளது?

image

2026 IPL தொடருக்கான மினி ஏலம் இன்று (டிச.16) அபு தாபியில் நடைபெற உள்ளது. இதில், எந்த அணி, எந்த வீரரை, எவ்வளவு தொகைக்கு ஏலத்தில் எடுப்பார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் நிலவுகிறது. இந்நிலையில், எந்த அணியிடம் எவ்வளவு இருப்புத் தொகை உள்ளது என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 16, 2025

ஜோர்டன் அரசரின் அர்ப்பணிப்பை பாராட்டிய PM

image

அரசுமுறை பயணமாக ஜோர்டன் சென்றுள்ள PM மோடி, மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடனான கலந்துரையாடல் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக
தெரிவித்துள்ளார். இந்தியா – ஜோர்டான் உறவுகளில் மன்னரின் தனிப்பட்ட அர்ப்பணிப்பு முக்கியமானது எனவும் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 75 ஆண்டுகள் ராஜாங்க உறவு வரும் காலங்களில் புதிய ஆற்றலுடன் முன்னேற்றமடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!