News October 20, 2025
தீபாவளிக்கு ஆட்டுக்கால் பாய செய்ய ரெடியா?

முதலில் சோம்பு, சீரகம், மிளகு, கசகசா, தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கருவேப்பிலை, வெங்காயம் இஞ்சி பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த தேங்காயை சேர்ந்து, வேக வைத்த ஆட்டுக்காலை தண்ணீரோடு ஊற்றி கொதிக்கவிடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கினால் பாய ரெடி.
Similar News
News March 28, 2026
டாஸ்மாக் 6 நாள்கள் விடுமுறை

தமிழக தேர்தலையொட்டி 4 நாள்கள் (ஏப்.21, 22, 23, மே 4) தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, மஹாவீர் ஜெயந்தியையொட்டி வரும் 31-ம் தேதி டாஸ்மாக் விடுமுறையாகும். அதேபோல், உழைப்பாளர் தினமான மே 1 அன்றும் மதுக்கடைகள் இயங்காது. இதனால், சுமார் 1 மாத காலக்கட்டத்தில் 6 நாள்கள் தமிழகத்தில் மதுக்கடைகள் இயங்காது. SHARE IT
News March 28, 2026
கேரளாவில் சசிகலா கட்சி போட்டி

சசிகலாவின் அஇபுதமமுக கட்சி கேரளாவில் போட்டியிடுகிறது. அங்குள்ள தேவிகுளம் (தனி) தொகுதியில் செல்லத்துரை என்பவர் போட்டியிடுவார் என சசிகலா அறிவித்துள்ளார். ஏற்கெனவே, புதுச்சேரியில் 4 தொகுதிகளில் அஇபுதமமுகவும், 10 தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சியான செங்கோல் நீதி மக்கள் முன்னேற்றக் கழகமும் போட்டியிடுகின்றன. தமிழகத்திற்கான வேட்பாளர் பட்டியல் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
News March 28, 2026
கோலிக்காக வரிசைக்கட்டி நிற்கும் சாதனைகள்..!

பெரிதும் எதிர்பார்க்கப்படும் IPL திருவிழா இன்று தொடங்குகிறது. ரன் மெஷின் விராட் கோலி இந்த சீசனில் IPL-ல் பல முக்கிய ரெக்கார்டுகளை உடைப்பதற்கு வாய்ப்புள்ளது. ரன் குவிப்பில் விராட் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய ரெக்கார்டுகளை உங்களுக்காக தொகுத்துள்ளோம். அவை என்னென்ன என அறிய மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்து பார்க்கவும். இதில் எதெல்லாம் சாத்தியம்?


