News October 20, 2025
லட்சுமி குபேர பூஜைக்கான பலன்களும்.. உகந்த நேரமும்

லட்சுமி குபேர பூஜை என்பது லட்சுமி தேவியையும், குபேரரையும் வேண்டி செய்யும் வழிபாடாகும். தீபாவளியில் இதனை செய்வதால் சங்கடங்களும், காரியத்தடைகளும் நீங்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இல்லத்தில் செல்வம் பெருகும். மாலை 3:45 முதல் இரவு 7 மணிவரை லட்சுமி பூஜை செய்ய நல்ல நேரம். தீபாவளி அன்று, குபேர பூஜையை செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள், சிவ – விஷ்ணு கோவில்களில், லட்சுமி தேவியை தரிசிக்கலாம்.
Similar News
News December 7, 2025
அரியலூர் படைவீரர் கொடிநாள் வசூல்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி, கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து, இன்று துவக்கி வைத்தார். மேலும் கொடிநாள் நிதி வசூலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கைவிட கூடுதலாக வசூலித்து, சாதனை படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு தெரிவித்தார்.
News December 7, 2025
நடுக்கடலில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி!

கிரேக்கத்தின் கிரீட் தீவு அருகே, புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலியாகினர். 2 பேர் மீட்கப்பட்ட நிலையில், பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆப்பிரிக்கா, ஆசியாவில் இருந்து மோதல்கள் மற்றும் வறுமை காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய பயன்படுத்தப்படும் முக்கிய நுழைவாயிலாக கிரீஸ் உள்ளது. இந்நிலையில், இந்த படகு எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
News December 7, 2025
அறிவாலயம் சுடுகாடு மாதிரி: நாஞ்சில் சம்பத்

திமுகவை விட தவெகவின் தேர்தல் பணிகள் சிறப்பாக இருப்பதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். மேலும், தவெக அலுவலகம் பிரமாதமாக உள்ளதாக கூறிய அவர், ஆனால், அறிவாலயம் சுடுகாடு மாதிரி இருக்கும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மேலும், தவெக அலுவலகத்தில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் லேப்டாப் வைத்து தேர்தலுக்கான பணியை செய்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


