News April 2, 2025
வக்ஃபு நிர்வாகத்தில் முஸ்லிம் அல்லாதோரா?: அமித்ஷா

வக்ஃபு வாரிய நிர்வாகத்தில் முஸ்லிம் அல்லாதோர் நியமிக்கப்பட மாட்டர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இஸ்லாமியர் அல்லாதோரை வக்ஃபு நிர்வாகத்தில் நியமிக்கும் வகையில் எந்த சரத்தும் மசாேதாவில் இல்லை என்றும், 1995ஆம் ஆண்டு சட்டத்தில் கவுன்சில், போர்டு தொடர்பாக உள்ள சரத்துகள் மசோதா மூலம் திருத்தப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 26, 2025
ரேஷன் கடைகளில் கேழ்வரகு மாவு இலவசம்: CM அறிவிப்பு

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக 1 கிலோ கேழ்வரகு மாவு வழங்கப்படும் என CM ரங்கசாமி அறிவித்துள்ளார். ஏற்கெனவே, இலவசமாக அரிசி, கோதுமை வழங்கப்பட்டுவரும் நிலையில், சத்துணவுக்காக கேழ்வரகு மாவை விலையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பச்சரிசி, நாட்டு சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு ஜன.3 முதல் புதுச்சேரியில் வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
News December 26, 2025
அதிக சுற்றுலா பயணிகள் பார்வையிட்ட மாநிலங்கள்

இந்தியாவில், உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் எந்த மாநிலம் அதிகம் பார்வையிடப்பட்டது என்பதை மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், 2024-25 ஆம் ஆண்டில் அதிகம் பார்வையிடப்பட்ட மாநிலம் எது தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்க எந்த மாநிலத்திற்கு சுற்றுலா சென்றீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
News December 26, 2025
BREAKING: பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு புதிய உத்தரவு

பள்ளிகள் திறப்பையொட்டி அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படும் முதல்நாளே, மாணவர்களுக்கு மூன்றாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடநூல் கழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தாமதமின்றி புத்தகங்கள் கிடைப்பதை பள்ளி HM-கள் உறுதி செய்யுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.


