News October 12, 2025
அதிமுகவில் போர்க்கொடி தூக்கும் மாஜிக்கள்?

செங்கோட்டையன் போட்ட வெடி நமத்து போய்விட்டது என இப்போதுதான் பெருமூச்சுவிட்டார் EPS. அதற்குள், மாவட்டங்களை தங்கள் வசம் வைத்திருக்கும் மாஜிக்கள் அவரை குடைய ஆரம்பித்துவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில், தாங்கள் கைகாட்டும் நபர்களுக்கே சீட் வழங்கணும் என அவர்கள் கூறுகிறார்களாம். ஆனால், அது தன்னுடைய முடிவு என்பதில் EPS தெளிவாக இருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News October 12, 2025
அமெரிக்க மியூசியத்தில் காந்தாரா பஞ்சுருளி!

காந்தாரா திரைப்படத்தால் பிரபலமான, துளு நாட்டின் பாரம்பரிய சின்னமான பஞ்சுருளி முகா முகமூடி, இப்போது உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. பல வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்த இந்த அரிய கலைப் பொருள், தற்போது USA, வாஷிங்டனில் உள்ள NMAA-வில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளது. இது இந்தியாவின் கலாச்சாரம், கலை மற்றும் நாட்டுப்புற மரபுகளை உலக அரங்கில் இணைக்கும் ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
News October 12, 2025
சீன அதிபருடனான டிரம்பின் சந்திப்பு ரத்தாகிறதா?

சீனப் பொருள்களுக்கு 100% கூடுதல் வரி விதித்தது அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாக சீனா விமர்சித்துள்ளது. USA-வின் இந்நடவடிக்கை சீனாவின் அரிதான உலோக ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கை என தெரிவித்துள்ளது. மேலும், இதனால் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் நடக்கவுள்ள டிரம்பின் சந்திப்பு ரத்து செய்யப்படலாம் எனவும் மிரட்டியுள்ளது.
News October 12, 2025
ரவுடி நாகேந்திரன் உடல் முன்பு 2-வது மகன் திருமணம்

<<17955513>>ரவுடி நாகேந்திரன்<<>> உடல் பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளியான நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி அக். 9-ம் தேதி இறந்தார். உடல் வியாசர்பாடியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, நாகேந்திரனின் உடல் முன்பு அவரது 2-வது மகன் அஜித் ராஜா கண்ணீர் மல்க திருமணம் செய்து கொண்டார்.