News September 1, 2025
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறதா?

விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர், தருமபுரி உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் ₹5 முதல் ₹20 வரை சுங்கக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சரக்கு, வாடகை வாகனங்கள், பஸ் கட்டணங்கள் உயர்வதோடு, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News September 4, 2025
நாய்களுடனான உறவை சிதைக்க கூடாது: மிஷ்கின்

தெரு நாய்கள் விவகாரத்தில் 2 பக்கத்தின் பாதிப்புகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். உயிர்வதை கொடுமையானது, அதே சமயம் நாய்கள் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். நாய்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு, உணர்வு ரீதியான என்றும், அதை சிதைத்துவிடாமல் திட்டமிடல் இருந்தால் சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
News September 4, 2025
தமிழ்நாட்டின் ஆற்றலை எடுத்துரைத்த ஸ்டாலின்

முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சென்றுள்ள CM ஸ்டாலின், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கேதரின்வெஸ்டை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் கல்வி, ஆராய்ச்சி, பசுமை பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக அவர் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில் நுட்பம், உற்பத்தி உள்ளிட்டவையில், தமிழ்நாடு வலுவாக உள்ளது குறித்து எடுத்துரைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
News September 4, 2025
தமிழக அரசில் 1,794 பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: தொழிற்கல்வி. வயதுவரம்பு: 18 – 32. தேர்வு முறை: எழுத்து தேர்வு. சம்பளம்: ₹18,800 – ₹59,900. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.2. தேர்வு நாள்: நவ.16. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <