News April 2, 2025
இந்த மாதம் 3 படங்கள் மட்டும் போதுமா?

வரும் 10ஆம் தேதி அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாக உள்ளது. அதேபோல், வரும் 18ஆம் தேதி சிபிராஜ் நடித்துள்ள ‘டென் ஹவர்ஸ்’, 24ஆம் தேதி சுந்தர் சி, வடிவேலு நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ ரிலீசாக உள்ளது. இதை தவிர்த்து, பெரிதாக சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் இந்த மாதம் ரிலீசாகவில்லை. 2925-ன் முதல் 3 மாதங்களில் 65 படங்கள் வெளியான நிலையில், இந்த மாதம் 3 முக்கிய படங்கள் மட்டுமே ரிலீசாக உள்ளது.
Similar News
News January 15, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 581 ▶குறள்: ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். ▶பொருள்: நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.
News January 15, 2026
‘ஜெயிலர் 2’-ல் ரஜினிக்கு வில்லன் விஜய் சேதுபதியா?

இனி தன்னை ஆச்சரியப்படுத்தும் கதைகளில் மட்டும் தான் வில்லனாக நடிப்பேன் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். வழக்கமான வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க சொல்லி பலர் தன்னை அணுகுவதாகவும், ஆனால், ஒரு வில்லனை ஹீரோவாக புரொமோட் செய்வதில் தனக்கு விருப்பமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ரஜினியை பிடிக்கும் என்பதால் ‘ஜெய்லர் 2’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
ஈரானின் எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் பதற்றம்

மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதனால், அமெரிக்கா தனது ராணுவப் படைகளை கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமானத் தளத்திலிருந்து திரும்ப பெற்றுள்ளது. அல் உதெய்த், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளமாகும்.


