News April 23, 2025
ஏப்ரல் 23: வரலாற்றில் இன்று

▶ உலக புத்தக நாள். ▶ 1639 – புனித ஜார்ஜ் கோட்டை ( தலைமைச் செயலகம்) சென்னை மாகாணத்தில் அமைக்கப்பட்டது. ▶ 1661 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் சார்லஸ் முடிசூடினார். ▶ 1938 – திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி பிறந்த நாள். ▶ 1977 – அமெரிக்க ரெஸ்லிங் வீரர் ஜான் சினா பிறந்த நாள். ▶ 1992 – இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே நினைவு நாள். 2005 – யூடியூப்பில் முதல் வீடியோ பதிவிடப்பட்டது.
Similar News
News April 23, 2025
தங்கர் பச்சானின் குடும்பத்தில் ஒரு IAS

இயக்குநர் தங்கர் பச்சானின் அண்ணன் செல்வராசுவின் பேத்தியான சரண்யா சரவணன், UPSC தேர்வில் 125-வது இடம்பிடித்து IAS-ஆக தேர்வாகியுள்ளார். கடலூர் பத்திரக்கோட்டையைச் சேர்ந்த சரண்யா, 4-வது முறையாக தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இதற்கு தங்கர் பச்சான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், ஒரு IAS-ஆக 2 பேருடைய கண்ணீரையாவது துடைப்பேன் என நம்புவதாகவும் சரண்யா கூறியுள்ளார்.
News April 23, 2025
வீட்டு மின்நுகர்வோரின் நிலைக்கட்டணம் ரத்து: அரசு

வீட்டு மின்நுகர்வோரின் நிலைக்கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், மின்கட்டண திருத்தத்தில் இருந்து நுகர்வோர்களுக்கு பல்வேறு சலுகைகள் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு உள்ளதாக கூறினார். திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது போல, நிலைக்கட்டணம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News April 23, 2025
இதற்குதான் பாஜகவோடு கூட்டணி.. இபிஎஸ் புது பிளான்!

பாஜகவுடனான கூட்டணிக்கு பிறகு முதல்முறையாக அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் (ஏப்.25) இபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என விளக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். இது திமுகவை வீழ்த்துவதற்கான கூட்டணி மட்டுமே, பாஜகவின் கொள்கைகளை அதிமுக ஒருபோதும் ஏற்காது என சிறுபான்மையினரை சந்தித்து விளக்க வேண்டுமென நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்த இருப்பதாக கூறப்படுகிறது.