News April 23, 2025
ஏப்ரல் 23: வரலாற்றில் இன்று

▶ உலக புத்தக நாள். ▶ 1639 – புனித ஜார்ஜ் கோட்டை ( தலைமைச் செயலகம்) சென்னை மாகாணத்தில் அமைக்கப்பட்டது. ▶ 1661 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் சார்லஸ் முடிசூடினார். ▶ 1938 – திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி பிறந்த நாள். ▶ 1977 – அமெரிக்க ரெஸ்லிங் வீரர் ஜான் சினா பிறந்த நாள். ▶ 1992 – இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே நினைவு நாள். 2005 – யூடியூப்பில் முதல் வீடியோ பதிவிடப்பட்டது.
Similar News
News March 12, 2026
பாலியல் குற்றவாளிகளை திமுக காக்கிறதா? EPS

தூத்துக்குடியில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக EPS கூறியுள்ளார். சிறுமியை காணவில்லை என புகாரளித்தும் போலீஸ் மெத்தனப் போக்குடன் செயல்பட்டதாக கூறிய அவர், குற்றவாளிகளை உடனே கண்டறிந்தால் உறவினர்கள் போராட்டத்தை முடித்துவிடப் போகின்றனர் என்றார். மேலும், உறவினர்களுடன் திமுக MLA ஏன் சமாதானம் பேசவேண்டும் எனவும் குற்றவாளிகளை காக்க திமுக முயல்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 12, 2026
BIG NEWS: இந்தியாவுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்!

ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அரசு அனுமதித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதனை NDTV செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இந்தியாவின் Pushpak மற்றும் Parimal கப்பல்கள் ஹார்முஸை பாதுகாப்பாகக் கடந்து இந்தியாவை நோக்கி வந்துக் கொண்டிருப்பதால், கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் பிரச்னை இருக்காது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. SHARE IT.
News March 12, 2026
FLASH: வெள்ளி விலை ₹10,000 குறைந்தது!

தங்கம் விலை <<19360302>>சவரனுக்கு ₹1,200<<>> சரிந்தது போலவே வெள்ளியும் கிலோவுக்கு ₹10,000 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் சில்லறை விலையில் 1 கிராம் வெள்ளி ₹10 குறைந்து ₹290-க்கும், பார் வெள்ளி கிலோ ₹10,000 குறைந்து ₹2,90,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 4% சரிந்து 1 அவுன்ஸ் 84 டாலராக நீடிப்பதால், வெள்ளியின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


