News April 11, 2024
Apply Now: 3,712 காலிப் பணியிடங்கள்

2024 ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வுக்கான (CHSL) விண்ணப்பத்தை, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) வெளியிட்டுள்ளது. இதில், அஞ்சல் உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், லோயர் டிவிஷன் கிளார்க் உட்பட 3,712 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும் இந்த வேலைக்கு, 12ஆவது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். விருப்பமுள்ளவர்கள் மே 7ஆம் தேதிக்குள் <
Similar News
News July 9, 2025
கடலூர் துயரம்: கிருஷ்ணசாமி பள்ளிக்கு இன்றும் விடுமுறை

விபத்து நிகழ்ந்து 24 மணி நேரம் கடந்த போதிலும் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் சோகத்தின் தடம் மாறவில்லை. விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் செழியன், சாருமதி, நிமிலேஷ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றும் கிருஷ்ணசாமி சிபிஎஸ்சி பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சக மாணவர்கள், ஆசிரியர்கள் சாருமதிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய காட்சிகள் காண்போரையும் கண்கலங்க வைத்தது.
News July 9, 2025
பாஸ்வோர்டுகளை AutoFill செய்கிறீர்களா..?

போனில் பேஸ்புக், X, இன்ஸ்டா போன்றவற்றில் உள்நுழைய பாஸ்வேர்டை AutoFill செய்து வைச்சிருக்கீங்களா? ஆமாம் என்றால், பெரிய ஆபத்தில் இருக்கிறீர்கள். இப்படி செய்வதால், போனின் OS பாஸ்வேர்ட் மேனேஜ்மேண்டின் குறைவதாக IIT ஹைதராபாத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக சைபர் கிரிமினல் தாக்குதல்களின் வாய்ப்பு அதிகம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இனி உங்களின் பாஸ்வேர்ட் டைப் பண்ண பழகிக்கோங்க.
News July 9, 2025
BREAKING: நடிகை அருணா வீட்டில் ED ரெய்டு!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகை அருணா வீட்டில் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 6 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையை நடத்தி வருவதாகவும், நடிகை அருணாவின் கணவர் குப்தாவின் தொழில் நிறுவனங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகை அருணா, இயக்குநர் பாரதிராஜாவின் ’கல்லுக்குள் ஈரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.