News April 8, 2025
நுகர்வோர் புகார்களை தெரிவிக்க விரைவில் செயலி

நுகர்வோர் புகார்களை தெரிவிக்க செயலி வெளியிடப்படும் என்று உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில், அவர்களுக்கு ஏற்படும் சேவை குறைபாடுகள் குறித்து சம்பவ இடத்தில் இருந்து புகார் அளிக்க ₹20 லட்சத்தில் வலைதளம், செயலி உருவாக்கப்படும் எனக் கூறியுள்ளது. இதற்கான செலவினம் நுகர்வோர் நலநிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News December 12, 2025
3-ம் உலகப்போர்: டிரம்ப் வார்னிங்!

4-வது ஆண்டை நெருங்கி வரும் ரஷ்யா-உக்ரைன் போர் மேலும் தொடர்ந்தால், அது ஒரு 3-ம் உலகப் போராக மாறக்கூடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த மாதம் மட்டும் சுமார் 25,000 பேர் இந்த போரில் உயிரிழந்துள்ளதாக கூறிய அவர், இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனிடையே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால், டிரம்ப் விரக்தியில் உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
News December 12, 2025
சபரிமலையில் மேலும் ஒரு தமிழர் உள்பட 19 பேர் மரணம்

சபரிமலைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு பக்தர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வமணி(40) என்ற பக்தர் மலைப்பாதையில் மயங்கி விழுந்த போது உயிர் பிரிந்துள்ளது. நவ.16-ல் நடை திறக்கப்பட்ட நிலையில், TN-ல் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் சபரிமலை கோயிலுக்கு சென்று வருகின்றனர். நடப்பு சீசனில் கோவை, கடலூரை சேர்ந்த பக்தர்கள் உட்பட 19 பேர் மாரடைப்பு மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர்.
News December 12, 2025
CINEMA 360°: ‘சிறை’ படத்தின் டிரெய்லரை வெளியிடும் தனுஷ்

*சசிகுமாரின் ‘MY LORD’ படத்தின் 2-வது சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. *ஆர்யாவின் பிறந்தநாளையொட்டி, அவரது 40-வது படத்திற்கான பூஜை நேற்று நடைபெற்றது. *விக்ரம் பிரபுவின் ‘சிறை’ படத்தின் டிரெய்லர் இன்று மதியம் 12.12 மணிக்கு தனுஷ் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. *விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.


