News August 8, 2024

மேலும் ஒரு வெண்கலப்பதக்கம் வென்றது இந்தியா

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. அரையிறுதியில் ஜெர்மனியுடன் தோல்வியை தழுவி இந்திய அணி, வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியுடன் மோதியது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி, வெண்கலப்பதக்கத்தை தட்டித்தூக்கியது.

Similar News

News October 10, 2025

ரயில்வேயில் 5,800 வேலைவாய்ப்பு

image

ரயில்வேயில் காலியாக உள்ள 5,800 என்.டி.பி.சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் சூப்பர்வைசர், சரக்கு ரயில் மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர், டைப்பிஸ்ட், சீனியர் கிளர்க் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு டிகிரி கல்வித் தகுதி போதுமானது. 33 வயதுக்கு உட்பட்டவர்கள், நவ.20-ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கும்.

News October 10, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 484 ▶குறள்: ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின். ▶பொருள்: ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.

News October 10, 2025

எம்ஜிஆர், வ.உ.சி பெயர்கள் எங்கே? அதிமுக

image

தெருக்கள், சாலைகளில் உள்ள ஜாதி பெயர்களை நீக்கும் விஷயத்தில், தமிழகத்திற்கு அடையாளமாக திகழும் தலைவர்களை காழ்ப்புணர்ச்சியுடன் திமுக புறக்கணிப்பதாக அதிமுக சாடியுள்ளது. மாற்றுப் பெயர் பட்டியலில் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்கள் இடம்பெறவில்லை என்றும் தீரன் சின்னமலை, இரட்டைமலை சீனிவாசன், வ.உ.சி உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் இடம்பெறாதது ஏன் எனவும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

error: Content is protected !!