News June 5, 2024
கடலூரில் அன்புமணி மைத்துனர் வெற்றி

கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், 1.85 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் சிவகொழுந்து 2ஆவது இடத்தையும், பாமக சார்பில் போட்டியிட்ட இயக்குநர் தங்கர்பச்சான் 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் மணிவாசகம் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
Similar News
News September 22, 2025
போன் Back case-ல பணம் வைக்குறீங்களா? ஜாக்கிரதை!

போன் Back case-ல் ரூபாய் நோட்டுகளை (அ) கிரெடிட் கார்டுகளை வைப்பவரா நீங்கள்? இதனால் உங்கள் போன் வெடிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இப்படி செய்வதால் போனில் உருவாகும் வெப்பம் வெளியாகாமல் தடைபடுகிறது. இதனால் நாளடைவில் பேட்டரிகள் வீங்கும், சில சமயங்களில் அது வெடிக்கலாம் என்கின்றனர். மேலும், போனில் உருவாகும் வெப்பம் ATM கார்டுகளை சேதப்படுத்துகின்றன. எனவே இப்படி பண்ணாதீங்க. SHARE.
News September 22, 2025
அதிமுக வெற்றிக்கு அணில் போல உதவுங்கள்

MGR-க்கு கூடிய கூட்டம் யாருக்கும் கூடாது என்றும் எந்த கூட்டத்தையும் கண்டு அதிமுகவினர் பயப்பட வேண்டாம் எனவும் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மதுரை அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், ராமர் பாலத்தை கட்ட உதவியதாக கூறப்படும் அணில் போல, 2026-ல் அதிமுக ஆட்சியமைக்க இளைஞர்கள் உதவ வேண்டும் என்றார். அப்போது, நீங்கள் வேற அணிலை நினைத்துவிடாதீர்கள் என கூறி விஜய்யை மறைமுகமாக சீண்டினார்.
News September 22, 2025
நடிகை MN ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பழம்பெரும் நடிகை MN ராஜத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. 1950 முதல் 60 வரை முன்னணி நடிகையாக கோலோச்சிய அவர், 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘ரத்த கண்ணீர்’, ‘பாசமலர்’, ‘நாடோடி மன்னன்’, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ என பல முக்கியமான படங்களில் நடித்துள்ள அவருக்கு விருது வழங்கி நடிகர் சங்கம் கவுரவித்துள்ளது.