News November 19, 2024
BGT தொடரில் அசத்திய பவுலர்கள், பேட்டர்கள்
BGT வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நாதன் லயன் (116) முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து அஷ்வின் (114), கும்ப்ளே (111), ஹர்பஜன் (95), ஜடேஜா (85), ஜாகீர் கான் (61) ஆகியோர் உள்ளனர். அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சச்சின் (3262) முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பாண்டிங் (2555), லட்சுமண் (2434), டிராவிட் (2143), கிளார்க் (2049), புஜாரா (2033) ஆகியோர் உள்ளனர்.
Similar News
News November 19, 2024
பொது அறிவு வினா – விடை
1) எல்நினோ என்பதன் தமிழாக்கம் என்ன? 2) RPU என்பதன் விரிவாக்கம் என்ன? 3) இந்தியாவில் வரதட்சணை தடைச் சட்டம் எந்தாண்டு நிறைவேற்றப்பட்டது? 4) நிறங்களின் தீவிரத்தை ஒப்புநோக்க உதவும் கருவி எது? 5) எலியின் அறிவியல் பெயர் என்ன? 6) ‘திரவிடத்தாய்’ என்ற நூலின் ஆசிரியர் யார்? 7) புகையும் கந்தக அமிலம் எது? 8) சீன நாணயத்தின் பெயர் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.
News November 19, 2024
10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுகை, சிவகங்கை, ராமநாதபுரம், குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக தூத்துக்குடி, நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஏற்கனவே இன்று(நவ.19) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 19, 2024
பங்கு முதலீடு Vs கடனீட்டுப் பத்திரங்கள்
பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கி, விற்பனை செய்வதை பங்கு முதலீடு (சமபங்கு) எனக் கூறலாம். பத்திரங்களின் வழியே முதலீட்டாளர்கள் மூலதனத்தை அளிப்பதை கடனீட்டுப் பத்திரங்கள் (கடன் மூலதனம்) என்று குறிப்பிடலாம். பங்குகளில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தில் ஈவுத்தொகை வழங்கப்படும். கடனீட்டுப் பத்திரங்களுக்கு நஷ்டத்திலும் வட்டி வழங்கப்படும். இதை பங்குகளாகவும் மாற்ற முடியும்.