News October 11, 2025
விஜய் கட்சியுடன் கூட்டணி.. டிரெண்டாகும் போட்டோ

ADMK, TVK கூட்டணிக்கு காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மாற்று கட்சி நிகழ்ச்சிகளில் TVK கொடியை பயன்படுத்த வேண்டாம் என நாமக்கல் நிர்வாகி கூறிய பிறகும் நேற்று மொடக்குறிச்சியில் EPS-யை TVK கொடிகளும் சேர்ந்தே வரவேற்றன. அதோடு, ‘நாளை நமதே! எங்களுடைய கஷ்டமான காலங்களில் தோள் கொடுத்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடியார்’ என விஜய் போட்டோவுடன் சேர்த்து சில பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.
Similar News
News October 11, 2025
EB பிரச்னையா? இங்கே புகாரளித்தால் உடனடி தீர்வு!

உங்கள் பகுதியில் Transformer வெடிச்சிடுச்சா? கம்பம் விழுந்துருச்சா? மின் கட்டணம் அதிகமா காட்டுதா? கவலையவிடுங்க. மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களுக்கும், தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் இயங்கும் 1912 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கலாம். அப்படி இல்லையெனில் இதற்காகவே TNEB Mobile App செயலி இருக்கிறது. இதில் புகாரளிக்கும் பட்சத்தில் உடனடியாக பிரச்னைகள் சரிசெய்து தரப்படும். SHARE.
News October 11, 2025
உதயநிதி தலைமறைவு.. சர்ச்சை வெடித்தது

#Rowdytime என தனது செல்ல நாயுடன் DCM உதயநிதி SM-ல் பதிவிடும் போட்டோ இன்று சர்ச்சையாக வெடித்துள்ளது. முன்னதாக செப்.20, 27-ல்(சனிக்கிழமை) நாயுடன் விளையாடும் போட்டோக்களை தனது முகத்துடன் பதிவிட்டிருந்தார். இன்று தலை மறைத்ததுபோல் இருப்பதால் விஜய்யை மறைமுகமாக கூறுகிறார் என ஒரு தரப்பினர் சண்டையிட்டு வருகின்றனர். அதேநேரம், திமுக ஆட்சியின் அவலங்களால் தலைமறைவாக இருப்பதாக அதிமுகவினர் பதிவிட்டு வருகின்றனர்.
News October 11, 2025
சிவாஜியின் நல்லாட்சி மதத்திற்காகவும் தான்: RSS

சத்ரபதி சிவாஜியின் சுயராஜ்யம், ஒற்றுமை பற்றிய தொலைநோக்கு பார்வையை மோகன் பகவத் பாராட்டியுள்ளார். அவர் சுயநலத்துக்காக எதுவும் செய்யவில்லை எனவும், கடவுள், மதம், தேசத்துக்காகவே பாடுபட்டார் எனவும் கூறினார். நாடு முழுவதும் இந்துத்துவாவில் பெருமிதம் கொண்டவர்கள், இந்துக்களிடையே ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தவர்கள் இருந்தபோதிலும், RSS நாக்பூரில் மட்டுமே உருவாக முடியும் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.