News December 31, 2024
ALERT: புத்தாண்டு வாழ்த்து மோசடி

புத்தாண்டு வாழ்த்து சொல்வதுபோல் மோசடி நடப்பதாக காவல்துறை எச்சரித்துள்ளது. WhatsApp எண்ணுக்கு புத்தாண்டு வாழ்த்து என வரும் லிங்க் மூலம் இந்த மோசடி அரங்கேறி வருகிறது. செல்போனுக்கு வரும் apk fileஐ திறந்தால் தரவுகள், வங்கி கணக்கு தொடர்பான விவரம் திருட வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற லிங்க் வந்தால், கிளிக் செய்ய வேண்டாம். மோசடி ஏதும் நடந்தால் cybercrime.gov.in & 1930 எண்ணில் புகார் பதியலாம்.
Similar News
News November 16, 2025
தங்கம் விலை மொத்தம் ₹2,800 குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் ₹1280, நேற்று ₹1520 என 2 நாளில் மொத்தம் ₹2800 தங்கம் விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தைகளில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், வரும் நாள்களிலும் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
News November 16, 2025
ஆதி திராவிட நல பள்ளிகளில் தரமான கல்வி இல்லை: கவர்னர்

ஆதி திராவிட நல பள்ளிகளில் தரமான கல்வியை கற்றுக் கொடுப்பதில்லை என கவர்னர் ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆதி திராவிட மாணவர்களுக்கான விடுதிகளும் தரமற்ற நிலையில் உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இந்திய அளவில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருந்தாலும், இங்குள்ள பழங்குடி மக்களிடம், நான் ஒரு இந்தியன் என்பதற்கான ஒரு ஆவணம் கூட இல்லை; இது அவர்களை புறக்கணிக்கும் செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
வாழ்க்கையை மாற்றும் பழக்கங்கள்

உங்களுக்குப் புதிய வாழ்க்கை தேவையில்லை. சில நல்ல பழக்கவழக்கங்கள் மட்டுமே தேவை. சிறிய, நிலையான செயல்கள் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகின்றன. என்ன பழக்கத்தை வழக்கமாக மாற்ற வேண்டும் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.


