News October 20, 2025
ALERT: கனமழை வெளுத்து வாங்கும்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம் மாவட்டங்களில் நண்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என IMD எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே சென்னை, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதால் தீபாவளி கொண்டாட்டம் களையிழந்துள்ளது. உங்கள் ஊரில் மழையா?
Similar News
News October 20, 2025
FLASH: இந்தாண்டு ₹7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு ₹1,000 கோடி கூடுதலாக, அதாவது ₹7,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக பட்டாசுகள் வணிக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 7 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த தீபாவளி சிவகாசி மக்களுக்கு உண்மையிலேயே சரவெடிதான்..
News October 20, 2025
இவர்களுக்கு மாதம் ₹1,000 கிடைக்கும்.. அரசு திட்டம்

காசநோயாளிகளுக்கு மாதா மாதம் ₹1,000 நிதியுதவி வழங்குகிறது நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட TB நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும். பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருக்கணும். https://nikshay.in/Home/Index -ல் விண்ணப்பிக்கலாம். அனைவரும் பயனடைய SHARE பண்ணுங்க.
News October 20, 2025
BREAKING: 7-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 14,420 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும், விநாடிக்கு 20,000 கனஅடி தண்ணீர் வரத்து இருப்பதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.