News October 20, 2025

BREAKING: 7-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

image

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 14,420 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும், விநாடிக்கு 20,000 கனஅடி தண்ணீர் வரத்து இருப்பதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Similar News

News December 14, 2025

முட்டை விலை மீண்டும் புதிய உச்சம்

image

முட்டை விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த நாள்கள் மட்டும் 15 காசுகள் உயர்ந்துள்ள நிலையில், நாமக்கல் கோழிப் பண்ணை வரலாற்றில் முதன்முறையாக 1 முட்டையின் கொள்முதல் விலை ₹6.25 ஆக உயர்ந்துள்ளது. கோழித் தீவன பொருள்களின் விலையேற்றமே, கொள்முதல் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதன்மூலம், சில்லறை விலையில் 1 முட்டை ₹8-க்கு மேல் விற்க வாய்ப்புள்ளது. உங்க பகுதியில் விலை என்ன?

News December 14, 2025

தொடர் விடுமுறை.. சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள்

image

சபரிமலை கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, 30 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 18 ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜன.14-ம் தேதி மகரஜோதி விழா நடைபெறும் வரை கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

News December 14, 2025

தமிழகத்தில் SIR படிவ பதிவேற்றம் நிறைவு

image

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், தமிழகத்தில் SIR படிவங்களை நிரப்பி அளிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து, டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து பிப்.14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும். இதனிடையே, நவ.4 முதல் பெறப்பட்ட SIR படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

error: Content is protected !!