News April 27, 2025

ஆலப்புழா ஜிம்கானா இயக்குநர் கஞ்சா வழக்கில் கைது!

image

சமீபத்தில் ஹிட்டான ‘ஆலப்புழா ஜிம்கானா’, ‘தள்ளுமாலா’ படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளனர். கொச்சியில் நடைபெற்ற சோதனையில், 1.6 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூவரும் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளனர். இது, மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே, நடிகர் ஷைன் டாமும் போதைபொருள் வழக்கில் சிக்கி இருக்கிறார்.

Similar News

News April 27, 2025

பாகிஸ்தானை 4-ஆக உடைக்க வேண்டும்: சு.சுவாமி ஐடியா

image

பாகிஸ்தானை மேலும் 4 துண்டுகளாக உடைப்பதே நீண்டகால தீர்வென சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இதுகுறித்து X தளத்தில், பாக்.ஐ, பலுசிஸ்தான், சிந்து, பக்துனிஸ்தான், மேற்கு பஞ்சாப் என 4 நாடுகளாக உடைக்க வேண்டும். அதில், மேற்கு பஞ்சாப் தவிர மற்ற 3-யையும் இந்தியா சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்க வேண்டும்; இந்த 4 நாடுகளுக்கும் இந்திய ராணுவம் பாதுகாப்பளிக்க தயாராக இருக்க வேண்டுமென தெரிவித்தார்.

News April 27, 2025

சிம்புவுக்கு ஜோடியாகும் கயாது லோஹர்

image

தமிழின் ட்ரெண்டிங் நடிகை கயாது லோஹர், சிம்புவின் 49-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அசாமில் பிறந்த இவர், ’டிராகன்’ படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்திருக்கிறார். இதற்கு முன் அவர் தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சிம்புவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியிருப்பது அவரது திரை வாழ்வில் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News April 27, 2025

IPL: MI அபார வெற்றி

image

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் LSG அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது MI அணி. முதலில் பேட்டிங் செய்த MI அணியின் ரிக்கல்டன், சூர்யகுமார் அதிரடியாக விளையாடியதால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 215 ரன்கள் எடுத்தது. அதனை சேஸ் செய்த LSG வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், அந்த அணி 20 ஓவர்களில் வெறும் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

error: Content is protected !!