News April 6, 2025

அதிமுக EX எம்.பி. பெருமாள் காலமானார்

image

அதிமுக EX எம்.பி. பெருமாள் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதித்திருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். பெருமாள், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொருளாளர், முன்னாள் வாரிய துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அதிமுக ஆட்சிக்காலத் திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்த்ததில் பெரும் பங்கு வகித்ததால், அவரை மாநிலங்களவை எம்.பி.யாக்கினார் ஜெயலலிதா. RIP.

Similar News

News April 9, 2025

IPL-ல் அதிவேக சதமடித்த 5 ஜாம்பவான்கள்

image

IPL-ல் அதிவேகமாக சதமடித்த 5 வீரர்கள் யார் யார் என பார்க்கலாம். 2013ல் கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதமடித்து முதலிடத்தில் உள்ளார். யூசுப் பதான் 37 பந்துகளிலும், மில்லர் 38 பந்துகளிலும் சதமடித்து 2-வது, 3-வது இடங்களில் உள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதமடித்து 4-வது இடத்தில் உள்ளார். பஞ்சாப் வீரர் பிரியான்ஸ் 39 பந்துகளில் சதமடித்து 5-வது இடத்தில் உள்ளார்.

News April 9, 2025

IPL BREAKING: பஞ்சாப் அணி வெற்றி

image

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி கண்டிருக்கிறது பஞ்சாப். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 219 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணி அதிரடியாக விளையாடினாலும், அவர்களால் 20 ஓவர்களில் 201 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

News April 9, 2025

கான்வேயை வெளியேற்றிய சென்னை

image

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னையின் தொடக்க வீரர் கான்வே ரிட்டயர்ட் அவுட் மூலம் வெளியேறினார். 69 ரன்கள் எடுத்த அவருக்கு இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாட முடியவில்லை. ஆகையால், ரிட்டயர்ட் அவுட் மூலம் தானாக வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஜடேஜா களத்திற்கு வந்து தோனியுடன் இணைந்திருக்கிறார்.

error: Content is protected !!