News April 28, 2025
160 தொகுதிகளில் அதிமுக போட்டி? இபிஎஸ் திட்டம்

2026 தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணி அமைத்துள்ளன. தேமுதிக உள்ளிட்ட மேலும் சில கட்சிகளும் கூட்டணியில் சேரலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க, 160 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டுமென இபிஎஸ் முடிவு செய்திருப்பதாகவும், எஞ்சிய 74 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அளிக்க அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை கூட்டணி ஏற்குமா?
Similar News
News February 19, 2026
டிகிரி போதும்.. ₹75,000 வரை சம்பளம்!

வேலூர் SIMCO-வில் 48 Ayush டாக்டர்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. *வயது: 22- 40 *கல்வித்தகுதி: மருத்துவப் பிரிவில் (BSMS / BAMS / BHMS / BUMS) இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். *தேர்ச்சி முறை: கல்வித் தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வு * மார்ச் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *சம்பளம்: ₹25,000 – ₹75,000 வரை *விண்ணப்ப படிவம் பெற <
News February 19, 2026
கூடுதல் சீட்டுக்காக கூட்டணி மாற்றமா? திருமாவளவன்

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கட்டுக்கோப்பாக தேர்தலை சந்திக்கும் என திருமாவளவன் கூறியுள்ளார். திருச்சியில் பேசிய அவர், மதுவை ஒழிக்கும் நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை அளிக்கிறது. எனவே, மது ஒழிப்பு குறித்து திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூற வேண்டும் என்றார். மேலும், கூடுதல் சீட்டுக்காக கூட்டணி மாறும் அவசியம் விசிகவுக்கு இல்லை என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
News February 19, 2026
ELECTION: தமிழக தேர்தல் அதிகாரி புதிய அறிவிப்பு

TN-ல் காலியாக உள்ள 6 ராஜ்யசபா MP-க்களுக்கான தேர்தல் மார்ச் 16-ம் தேதி நடைபெறும் என <<19173174>>ECI நேற்று அறிவித்திருந்தது<<>>. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், இணைச் செயலாளரை உதவி தேர்தல் அதிகாரியாகவும் நியமனம் செய்து TN தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். அவர்களிடம் பிப்.26 முதல் மார்ச் 7-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.


