News March 21, 2024
அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் (2)

11. திருச்சி – கருப்பையா 12.பெரம்பலூா் – சந்திரமோகன் 13.மயிலாடுதுறை – பாபு 14.தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி 15.நெல்லை – சிம்லா முத்துச்சோழன் 16.குமரி – பசிலியான் நாசரேத் 17.புதுச்சேரி – தமிழ்வேந்தன் உள்ளிட்டோர் அதிமுக சார்பில் நேரடியாக போட்டியிட உள்ளனர்.
Similar News
News February 10, 2026
திமுகவிலும் விஜய் ரசிகர்கள்: ஒப்புக்கொண்ட அப்பாவு

வரும் தேர்தலில் இளைஞர்களின் வாக்குகள், கணிசமாக விஜய்க்கு செல்ல வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு, விஜய் ஒரு நடிகர்; அவருக்கான ரசிகர்கள், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக என அனைத்து கட்சிகளிலும் இருப்பார்கள் என அப்பாவு தெரிவித்தார். ஆனால், திமுக ஆட்சி சிறப்பாக இருப்பதால், மு.க.ஸ்டாலினை மக்கள் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுப்பார்கள் என்றார்.
News February 10, 2026
திமுக மன்னிப்பு கேட்குமா?

திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் கிளையின் தீர்ப்பு செல்லும் என்று SC தெளிவுபடுத்தியுள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள பாஜகவின் வினோஜ் பி செல்வம், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுகளில் உள்நோக்கம் இருப்பதாக தவறான குற்றச்சாட்டை பரப்பி, அவருக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்த திமுக மன்னிப்பு கேட்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
News February 10, 2026
கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்

*வருவதும் போவதும் இன்பமும் துன்பமும்;
வந்தால் போகாதது புகழும் பழியும்;
போனால் வராதது மானமும் உயிரும்;
தானாக வருவது இளமையும் மூப்பும்;
நம்முடன் வருவது பாவமும் புண்ணியமும்
*அன்பும் மரியாதையும் இருப்பவன்
உலகத்தில் எதையும் சாதித்து விடுவான்.
தீமை செய்பவனும் அவனிடம் பணிவான்.
*இதயத்திலிருந்து பிறக்கும் அன்பே பண்பு.
மூளையிலிருந்து தோன்றும் கூற்றே அறிவு. அறிவை விட பண்பே உலகுக்குத் தேவை


