News October 11, 2025

ஆப்கன் அமைச்சரின் பிரஸ்மீட் சர்ச்சை: மத்திய அரசு விளக்கம்

image

டெல்லியில் நேற்று நடந்த ஆப்கன் அமைச்சரின் செய்தியாளர்கள் சந்திப்பில் <<17974683>>பெண் செய்தியாளர்கள்<<>> அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இதில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கன் தூதரக அதிகாரிகளே இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியதாகவும், ஆப்கன் தூதரக விவகாரங்கள் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வராது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

Similar News

News March 26, 2026

புதுச்சேரி: வாக்காளர் எடுத்துச்செல்லும் ஆவணங்கள்

image

புதுவை சட்டசபை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய 12 ஆவணங்களில் ஒன்றை வாக்களிக்க பயன்படுத்தலாம் என தேர்தல் துறை அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு: “ஆதார் அட்டை, பணி அட்டை, பாங்க் பாஸ் புக், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, (passport) ஓய்வூதிய ஆவணம், அரசு ஊழியர் அடையாள அட்டை, MP, MLA அடையாள அட்டை, ஊனமுற்றோர் அடையாள அட்டை” ஆகியவை ஆகும்.

News March 26, 2026

மதுரை: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News March 26, 2026

இந்திய கப்பல்களுக்கு தடை இல்லை: ஈரான் அமைச்சர்

image

இந்தியாவுக்காக ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து திறந்தே இருக்கும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உறுதியளித்துள்ளார். ஈரானுடன் நட்பு நாடாக இருக்கும் இந்தியா, சீனா, ஈராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான கப்பல்கள் தொடர்ந்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவுக்கான எரிபொருள் தட்டுப்பாடு பிரச்னை நீங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே 5 கப்பல்கள் இந்தியா நோக்கி வருகின்றன.

error: Content is protected !!