News October 18, 2025
இந்திய ரூபாயை மிஞ்சிய ஆப்கன் கரன்சி

ஆப்கானிஸ்தானின் கரன்சி மதிப்பு, இந்திய ரூபாயின் மதிப்பைவிட உயர்ந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. தற்போது 1 ஆப்கானி (AFN) = 1.33 ரூபாயாக உயர்ந்துள்ளது. தாலிபன்கள் உறுதியாக கடைப்பிடிக்கும் நாணய கொள்கை தான் இதற்கு முக்கிய காரணமாம். அமெரிக்க டாலர் மற்றும் பாகிஸ்தான் கரன்சிக்கு தடை விதித்ததுடன், அனைத்து பரிவர்த்தனைகளையும் ஆப்கன் கரன்சியிலேயே நடத்துவதை கட்டாயமாக்கி உள்ளதால், ஆப்கன் கரன்சி வலுவாக உள்ளதாம்.
Similar News
News April 4, 2026
சூரிய பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்

ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு அன்று சூரியன் மேஷ ராசியில் நுழைகிறார். இது, பல ராசிகளுக்கு நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக, மேஷம், துலாம், விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு பண வரவு, தொழில், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியம், திருமண யோகம் கூடி வரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த 4 ராசிகளுக்கு இனி ராஜயோகம்தான். நீங்க என்ன ராசி?
News April 4, 2026
விஜய் செய்வது சரியான அரசியல் அல்ல: கனிமொழி

எதையெல்லாம் செய்ய முடியாதோ அவற்றை வாக்குறுதியாக அளித்து மக்களை ஏமாற்றுவதே திமுகவின் வேலை என <<19546892>>விஜய்<<>> விமர்சித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய கனிமொழி, உண்மை எதுவென்றே தெரியாமல் தேர்தல் நேரத்தில் இவ்வாறு பேசுவது சரியான அரசியல் கிடையாது என பதிலடி கொடுத்துள்ளார். ஏனெனில், 2021 திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த மகளிர் உரிமைத் திட்டம் நிறைவேற்றப்பட்டது என்றும் அவர் கூறினார்.
News April 4, 2026
ரஜினி திருந்திவிட்டார்.. விஜய்? அமீர் அட்வைஸ்

ரஜினியுடன் விஜய்யை ஒப்பிட்டு அமீர் பேசியது கவனம் பெற்றுள்ளது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்ததும் அவரை நான் எதிர்த்தேன், எனவே அவர் தன்னை திருத்திக் கொண்டு அரசியலில் இருந்தே விலகி மீண்டும் நடிக்கச் சென்றார் என அமீர் கூறியுள்ளார். அதேபோல் அரசியல் பற்றி எதுவும் தெரியாமல் கட்சி ஆரம்பித்துள்ள விஜய்யும் கட்சியை கலைத்து விட்டுச் சென்றால் அவருக்கு நல்லது என தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து?


