News October 18, 2025
இந்திய ரூபாயை மிஞ்சிய ஆப்கன் கரன்சி

ஆப்கானிஸ்தானின் கரன்சி மதிப்பு, இந்திய ரூபாயின் மதிப்பைவிட உயர்ந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. தற்போது 1 ஆப்கானி (AFN) = 1.33 ரூபாயாக உயர்ந்துள்ளது. தாலிபன்கள் உறுதியாக கடைப்பிடிக்கும் நாணய கொள்கை தான் இதற்கு முக்கிய காரணமாம். அமெரிக்க டாலர் மற்றும் பாகிஸ்தான் கரன்சிக்கு தடை விதித்ததுடன், அனைத்து பரிவர்த்தனைகளையும் ஆப்கன் கரன்சியிலேயே நடத்துவதை கட்டாயமாக்கி உள்ளதால், ஆப்கன் கரன்சி வலுவாக உள்ளதாம்.
Similar News
News December 14, 2025
நிதிஷ் குமாருக்கு கூடுதல் அதிகாரம்!

பிஹாரில் புதிதாக உருவாக்கப்பட்ட 3 துறைகளில் விமான போக்குவரத்து துறையை CM நிதிஷ்குமார் தனது வசமாக்கியுள்ளார். இளைஞர் நலன் & வேலைவாய்ப்பு, உயர் கல்வி மற்றும் விமான போக்குவரத்து ஆகிய 3 துறைகள் உருவாக்க கடந்த 9-ம் தேதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 20 ஆண்டுகளாக தனது வசம் இருந்த உள்துறையை நிதிஷ் இழந்த நிலையில், அவரை கூல் செய்ய விமான போக்குவரத்து துறையை பாஜக விட்டுக்கொடுத்ததா என RJD சாடி வருகிறது.
News December 14, 2025
சற்று நேரத்தில் அறிவிக்கிறார் விஜய்

தவெகவில் ஒரு சில தொகுதிகளின் வேட்பாளர்கள் இன்று(டிச.14) வெளியிடப்படவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே வேட்பாளர்களிடம் விஜய் நேர்காணல் நடத்திய நிலையில், 70% பட்டியலை அவர் உறுதி செய்துள்ளதாக தெரிகிறது. திருச்செங்கோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் முன்னிலையில் காணொலி காட்சி வாயிலாக வேட்பாளர்களை விஜய் அறிவிக்க உள்ளாராம்.
News December 14, 2025
நான் எந்த தவறையும் செய்ய மாட்டேன்: கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு ₹1020 கோடி ஊழல் செய்ததாக வெளியான செய்தி, தமிழக அரசியலில் பெரும் நெருப்பாக பற்றி எரிகிறது. இந்நிலையில், நான் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், நேருவை குறிவைத்து அடித்தால், இந்த பகுதியில் (திருச்சி) திமுகவை அடிக்கலாம் என்ற நோக்கத்தோடு பாஜகவினர் வேலை செய்கிறார்கள் எனக் கூறிய அவர், உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், எந்தத் தவறையும் செய்யமாட்டேன் என்றார்.


