News August 7, 2024

அதிமுக மா.செ கூட்டம் ஒத்திவைப்பு

image

அதிமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சித்தலைமை அறிவித்துள்ளது. சென்னையில் நாளை மறுதினம் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என, இருதினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டம் எப்போது நடைபெறும், எதற்காக ஒத்திவைக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.

Similar News

News April 10, 2026

சென்னை: அரசின் முக்கிய எண்கள்!

image

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை-044-28364951, அரசு பொது மருத்துவமனை 044-25305000, அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை- 044-25666000, அரசு ராயப்பேட்டை மருத்துவமனை- 044-28483051, அரசு ஸ்டான்லி மருத்துவமனை- 044-25281347 மின்வாரிய தலைமை பொறியாளர்-044-28520131. இதுபோன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க!

News April 10, 2026

ஜன நாயகன் லீக்.. பொங்கிய சிவகார்த்திகேயன்

image

‘ஜன நாயகன்’ படம் முழுவதுமே இணையத்தில் கசிந்ததற்கு நடிகர் சிவகார்த்திகேயன் கண்டனம் தெரிவித்துள்ளார். படத்தை கசியச் செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிவகார்த்திகேயன் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொருவரும் திரைத்துறையினரின் கடின உழைப்புக்கும், திரைத்துறைக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், அனைவரும் படத்தை தியேட்டரில் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

News April 10, 2026

பிஹாரின் அடுத்த முதல்வர் யார்?

image

தேசிய அரசியலுக்குள் <<19614648>>நிதிஷ் <<>>நுழைந்துவிட்டதால், பிஹாரின் அடுத்த முதல்வர் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, பாஜக மூத்த தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். தற்போது முதல்வர் ரேஸில் பாஜகவின் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. டெல்லி தலைமையின் ஆதரவு உள்ளதால் சாம்ராட் சௌத்ரிக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக பேசப்படுகிறது.

error: Content is protected !!