News August 7, 2024
அதிமுக மா.செ கூட்டம் ஒத்திவைப்பு

அதிமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சித்தலைமை அறிவித்துள்ளது. சென்னையில் நாளை மறுதினம் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என, இருதினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டம் எப்போது நடைபெறும், எதற்காக ஒத்திவைக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.
Similar News
News November 14, 2025
பிஹார் தேர்தல் முடிவுகள்.. ஆரம்பமே அபாரம்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஜேடியூ- பாஜக கூட்டணி 15 இடங்களிலும், ஆர்ஜேடி – காங்., கூட்டணி 10 இடங்களிலும், ஜன் சுராஜ் 2 இடங்களிலும், மற்றவை 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.
News November 14, 2025
By Election Results: வாக்கு எண்ணும் பணி தொடங்கியது!

தெலங்கானா உள்ளிட்ட 6 மாநிலங்கள் & ஜம்மு காஷ்மீரில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளன. ஜூபிளி ஹில்ஸ் (தெலங்கானா), தரன் தரன் (பஞ்சாப்), கட்ஸிலா (ஜார்க்கண்ட்), அன்டா (ராஜஸ்தான்), டம்பா (மிசோரம்), நுவாபடா (ஒடிசா), புட்கம், நக்ரோட்டா (ஜம்மு காஷ்மீர்) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவ.11-ல் நடைபெற்றது.
News November 14, 2025
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 243 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியுள்ளது. பிஹார் சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 67.13% வாக்குகள் பதிவாகியிருந்தன. குறிப்பாக, ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்குகள் செலுத்தியுள்ளனர். மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 2,616 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


