News April 16, 2025
தற்கொலை செய்த நடிகை மோனல்; 23 ஆண்டாக மர்மம்

பத்ரி, சமுத்திரம் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சிம்ரனின் சகோதரி மோனல். 2002 ஏப்ரல் 14-ம் தேதி திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டார். அப்போது மோனல் எழுதி வைத்த தற்கொலை கடிதத்தில், உண்மையான ஆண்மகனை தாம் பார்க்கவில்லை எனக் கூறியிருந்தார். யாரோ காதலித்து அவரை ஏமாற்றிவிட்டதாக அப்போது கூறப்பட்டது. ஆனால் 23 ஆண்டுகளாகியும் மோனலை ஏமாற்றியது யாரென தெரியவில்லை. மர்மம் நீடிக்கிறது.
Similar News
News November 2, 2025
340 பணியிடங்கள்; ₹40,000 முதல் சம்பளம்!

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்கள் உள்ளன. புரொபேஷனரி பொறியாளர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் சார்ந்த பாடப்பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc படித்திருக்க வேண்டும். இதற்காக ₹40,000 முதல் – ₹1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். நவ.14-க்குள் <
News November 2, 2025
வங்கிக் கணக்கில் ₹2,000.. வந்தது புதிய அப்டேட்!

நீண்ட காலமாக PM கிசான் யோஜனா திட்டத்தின் 21-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். நவம்பர் முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு ₹2,000 வழங்கப்படும் என சமீபத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில், பிஹாரில் முதல்கட்ட தேர்தல் 6-ம் தேதி நடக்கவிருப்பதால், அதற்கு முன்னதாகவே நாளை அல்லது நாளை மறுநாள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2,000 வரவு வைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 2, 2025
அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது

CM ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது. நவம்பர் 4-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (SIR) தொடங்கவிருக்கிறது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து, இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள், தேமுதிக உள்ளிட்டவை பங்கேற்ற நிலையில், தவெக, நாதக உள்ளிட்ட 21 கட்சிகள் பங்கேற்கவில்லை.


