News March 16, 2025
நடிகை ‘பிந்து கோஷ்’ காலமானார்

பல நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நடிகை பிந்து கோஷ், சென்னையில் காலமானார். 1982ஆம் ஆண்டு வெளியான ‘கோழி கூவுது’ படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்த இவர், தென்னிந்திய மொழிப் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். விமலா என்ற இயற்பெயர் கொண்ட இவர், களத்தூர் கண்ணம்மா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின்னர், ரஜினி, சிவாஜி ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
Similar News
News March 17, 2025
கணவன் முன்பே மனைவி பலாத்காரம்… கொடுமை!

ஒடிசாவின் பலோசர் மாவட்டத்தில் புதிதாக திருமணமான ஒருவர், தன் மனைவியின் ஆதாரில் உள்ள தவறை சரிசெய்ய பக்கத்து வீட்டுக்காரரை நாடியுள்ளார். உதவுவதாக கூறிய அந்நபர், கணவன், மனைவி இருவரையும் மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்று, கணவனுக்கு மது வாங்கிக் கொடுத்துள்ளான். போதையில் கணவன் சுயநினைவை இழந்த நிலையில், வீடு திரும்பும் வழியில் அப்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு தப்பிவிட்டான். போலீஸ் தேடி வருகின்றனர்.
News March 17, 2025
ராசி பலன்கள் (17.03.2025)

➤மேஷம் – விருத்தி ➤ரிஷபம் – நலம் ➤மிதுனம் – ஓய்வு ➤கடகம் – சிரமம் ➤ சிம்மம் – லாபம் ➤கன்னி – நட்பு ➤துலாம் – பக்தி ➤விருச்சிகம் – நன்மை ➤தனுசு – வெற்றி ➤மகரம் – களிப்பு ➤கும்பம் – சோர்வு ➤மீனம் – போட்டி.
News March 16, 2025
மம்முட்டிக்கு கேன்சரா?

பிரபல மலையாள நடிகரான மம்முட்டிக்கு கேன்சர் இருப்பதாகவும், இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் செய்தி பரவி வருகிறது. ஆனால் இது பொய் செய்தி என்றும், ரம்ஜானுக்கு நோன்பு இருப்பதால், படப்பிடிப்பில் பங்கேற்காமல் விடுப்பு எடுத்து சென்னையில் குடும்பத்தினருடன் அவர் தங்கி இருப்பதாக மம்முட்டியின் அலுவலகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.