News July 5, 2025
போனில் Radiation எவ்வளோ இருக்குனு தெரிஞ்சிக்கோங்க!

போன்களில் இருந்து வெளிவரும் Radiation நமது உடலுக்கு ஆபத்து எனக்கூறப்படுகிறது. ஆனாலும், பலருக்கும் அவர்களது போனில் எவ்வளவு Radiation இருக்கிறது என்பது தெரியாது. அதை Specific Absorption Rate (SAR) மூலம் கண்டறியலாம். போனின் யூசர் Manual அல்லது நிறுவனத்தின் இணையதளத்தில் Radiation அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். அல்லது போனில் *#07# டயல் செய்து பாருங்க. உங்க போனில் எவ்வளவு Radiation எவ்வளவு இருக்கு?
Similar News
News November 17, 2025
சீட் ஷேரிங்கில் திமுக உடன் பிரச்னையா? காங்., MP பதில்

திமுக உடனான கூட்டணியில் விரிசலா என்ற கேள்விக்கு மாணிக்கம் தாகூர் பதிலளித்துள்ளார். காங்கிரஸுக்கு பலத்தின் அடிப்படையில் அதிகாரமும், சீட்டும் வேண்டும் என நாங்கள் நினைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்துள்ளார். அதிகாரத்தை விட்டுக்கொடுப்பது மட்டுமே எங்கள் வேலையா என தொண்டர்கள் கேட்கின்றனர் எனவும், இதற்கு காங்கிரஸ் தலைமை உரிய நேரத்தில், சரியான முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
News November 17, 2025
பாகிஸ்தானில் நொடியில் தப்பிய பயணிகள் ரயில்

பாக்.,கில் தனி நாடு கோரி பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர், தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்ப்பதற்காக நசீராபாத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் வெடிகுண்டு இருந்துள்ளது. ஆனால், அது ரயில் சென்ற பிறகே வெடித்தது. இதனால் பயணிகள் உயிர்தப்பினர். சம்பவ இடத்தில் கிடந்த வெடிபொருள்களை கைப்பற்றி, அடுத்தகட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
ரயில்வேயில் 5,810 Vacancies: சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!

ரயில்வேயில் காலியாக உள்ள நான்-டெக்னிக்கல் (NTPC) பதவிகளில் 5,810 பணியிடங்களுக்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. அதன்படி சீனியர் கிளர்க், அசிஸ்டென்ட் ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நவ.20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18-33 வயதிற்குள் இருக்க வேண்டும். இங்கே <


