News April 9, 2024
தாய்க்காக சாய் பாபா கோயில் கட்டிய நடிகர் விஜய்

தாய் ஷோபனாவுக்காக நடிகர் விஜய், சாய் பாபா கோயில் கட்டிய நிகழ்வு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாய் பாபா கோயிலில் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் நேற்று வைரலானது. அந்தக் கோயில் சென்னை கொரட்டூரில் 8 கிரவுண்ட் நிலத்தில், நடிகர் விஜய் கட்டியது எனத் தெரியவந்துள்ளது. ஷோபா தீவிர சாய் பாபா பக்தை என்பதால், அவரது ஆசைக்காக 8 கிரவுண்ட் நிலத்தில் விஜய் இந்தக் கோயிலை கட்டிக் கொடுத்துள்ளார்.
Similar News
News April 24, 2025
2 வாரம் இண்டெர்நெட் இல்லாமல் இருந்தால்…

இப்போது, பலருக்கும் இருக்கும் முக்கிய பிரச்னையே எந்த ஒரு விஷயத்திலும் Focus பண்ண முடியாமல் தொடர்ந்து தடுமாறுவது தான். ஆனால், 2 வாரம் இண்டெர்நெட் பயன்படுத்தாமல் இருந்தால், உங்கள் மூளை 10 ஆண்டுக்கு முன்பு எப்படி செயல்பட்டதோ அதே புத்துணர்ச்சியுடன் செயல்படும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். Texas யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். ட்ரை பண்ணி பாருங்க!
News April 24, 2025
மோசமான ரெக்கார்டை படைத்த SRH!

IPL தொடரில் SRH மோசமான ரெக்கார்டை படைத்துள்ளது. IPL-ல் அந்த அணி மொத்தமாக இதுவரை 100 தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த நிலைக்கு தள்ளப்பட்ட 7-வது டீம் SRH. இந்த பட்டியலில், டெல்லி & பஞ்சாப் தலா 137 முறையும், RCB (132), KKR (125), மும்பை (121), ராஜஸ்தான் (113) மற்றும் CSK (105) முறையும் தோல்வி அடைந்துள்ளன.
News April 24, 2025
எப்படி இருக்கிறது சுந்தர்.சி – வடிவேலுவின் ‘கேங்கர்ஸ்’?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சுந்தர்.சி – வடிவேலு காம்போவில் வெளிவந்துள்ள ‘கேங்கர்ஸ்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வடிவேலு காமெடியில் மிரட்டி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர். இந்த சம்மருக்கு இந்த படம் தான் பெஸ்ட் என்றும், Second Half-ல் சுந்தர்.சி-யின் Trademark காமெடி பிளாஸ்ட் என்றும் பதிவிடுகின்றனர். நீங்க படம் பாத்தாச்சா.. எப்படி இருக்கு?