News April 18, 2025
நடிகர் ஸ்ரீ ஹாஸ்பிடலில் அனுமதி: குடும்பத்தினர்

நடிகர் ஸ்ரீ, ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் உடல்நிலை குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். நடிகர் ஸ்ரீ-யின் தனி மனித உரிமையை அனைவரும் மதிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். நடிகர் ஸ்ரீ குறித்த நிலை தெரியாததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 13, 2025
ஒரே போட்டோவில் 2 G.O.A.T’s!

இந்தியா வந்துள்ள மெஸ்ஸியை காண ரசிகர்களை போலவே, பல நட்சத்திரங்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்று காலை கொல்கத்தா சென்ற அவரை நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவரது மகன், ஆர்யன் கான் மெஸ்ஸியுடன் போட்டோ எடுத்து கொண்டார். ஒரே ஃப்ரேமில் ஷாருக்கானும், மெஸ்ஸியும் இருப்பதை ரசிகர்கள், ‘2 G.O.A.T’s in one frame’ என கமெண்ட் செய்து வைரலாக்கியுள்ளனர்.
News December 13, 2025
BREAKING: மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. குறிப்பாக, டெல்டா, தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வரும் நாள்களில் அதிகாலையில் பனியின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் IMD தெரிவித்துள்ளது. அதனால், கவனமாக இருங்கள் நண்பர்களே!
News December 13, 2025
நடிச்சா கண்டிப்பா சொல்றேன்.. சந்தானம்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் ‘ஜெயிலர் 2′ படத்தில் சந்தானம் நடிக்கிறார் என்ற பேச்சு அடிபடுகிறது. ஆனால், அதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. சந்தானமும் அமைதியாகவே இருக்கிறார். இந்த நிலையில்தான், அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். அது என்ன கள்ளக்காதலா? மறைத்து செய்ய, படம் தானே, சொல்லிட்டுதான் செய்வேன்’ என பதிலளித்தார்.


