News October 1, 2025
BCCI-யிடம் மன்னிப்பு கேட்ட ACC தலைவர்

ஆசிய கோப்பை இறுதி போட்டியின் போது நடந்த சம்பவங்களுக்காக ACC தலைவர் <<17882243>>மொசின் நக்வி<<>> BCCI-யிடம் மன்னிப்பு கோரியுள்ளார். சூழல் இந்த அளவிற்கு மோசமடையும் என எதிர்பார்க்கவில்லை என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். அதேபோல், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், துபாய் ACC அலுவலகத்திற்கு வந்து கோப்பையை பெற்று கொள்ள வேண்டும் என்ற அவரது பிடிவாதத்தை BCCI நிராகரித்துள்ளது.
Similar News
News October 1, 2025
மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் நாளை(அக்.2) டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து டாஸ்மாக் கடைகளும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டு வருகின்றன. மேலும், விதிகளை மீறி மது விற்பனை செய்தாலோ, கள்ளச் சந்தையில் பதுக்கினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News October 1, 2025
Cinema Roundup: தெலுங்கு சினிமாவில் மீண்டும் நயன்தாரா

*பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படம் அக்.17-ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு. *ஜீவாவின் அடுத்த படத்திற்கு ‘தலைவர் தம்பி தலைமையில்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. *சிரஞ்சீவியின் புதிய படத்தில் சசிரேகா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். *கமலின் ‘நாயகன்’ படம் நவ.6-ல் ரீ-ரிலீசாகிறது. * நடிகை டிம்பிள் ஹயாத்தி தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவர் வீட்டு பணிப்பெண் போலீசில் புகார்.
News October 1, 2025
விஜய்க்கு கூடியது கட்டுப்பாடற்ற கூட்டம்

விஜய்க்கு கூடியது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல, கட்டுப்பாடற்ற கூட்டம் என்று செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். கரூர் கூட்டத்தில் சிலர் கத்தியால் கீறப்பட்டிருந்தால், அவர்கள் உடம்பில் காயங்கள் எங்கே என்று கேள்வி எழுப்பிய அவர், விஜய்யின் கவனத்தை ஈர்க்க யாராவது செருப்பை வீசியிருக்கக்கூடும் என்றார். மேலும், 7 மணி நேரம் தாமதம் ஏன் என விஜய்யிடம் கேளுங்கள் எனவும் தெரிவித்தார்.