News August 7, 2025
பள்ளிகளிலேயே ஆதார் பயோமெட்ரிக்.. அரசு அறிவிப்பு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக்கை புதுப்பிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 5 – 7 வயதுக்குட்பட்ட 8 லட்சம் மாணவர்கள் முதல்முறை கட்டாய பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்றும், 15- 17 வயதுக்குட்பட்ட 7 லட்சம் மாணவர்கள் 2-வது முறை புதுப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் முகாம் அமைத்து அஞ்சல் துறை இந்த பணிகளை மேற்கொள்ளும்.
Similar News
News August 7, 2025
மக்களின் வாழக்கை தரம் உயர்ந்திருக்கிறதா? இபிஎஸ்

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது மக்களை ஏமாற்றக் கூறும் மாபெரும் பொய் என EPS விமர்சித்துள்ளார். உண்மையிலேயே தமிழகம் பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளதா, மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறதா என கேள்வி எழுப்பினார். இரட்டை இலக்க வளர்ச்சி என மாயத்தோற்றத்தை திமுகவினர் உருவாக்குவதாகவும் கூறினார். கட்டுமானத்துறை வளர்ச்சிக்கு கடந்த அதிமுக ஆட்சியில் மேற்கொண்ட நடவடிக்கையே காரணமென்றார்.
News August 7, 2025
ஆரஞ்ச் அலர்ட்.. 12 மாவட்டங்களில் கனமழை: IMD

தமிழகத்தில் சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், மேலும் 3 நாள்களுக்கு மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், தி.மலை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் கனமழை பெய்யக்கூடும் என்றும் IMD எச்சரிக்கை விடுத்துள்ளது.
News August 7, 2025
தீர்க்க சுமங்கலி அருள் பெற பெண்கள் என்ன செய்யலாம்?

வரலட்சுமி விரதத்தன்று பெண்கள் எவ்வாறு வழிபடலாம் என்பதை பார்ப்போம். பூஜையறையில் கலசம் வைத்து அதற்கு நெய் தீபம் ஏற்றியும், அன்னைக்கு தாமரை மலர், துளசி இலை படைத்தும் வழிபடலாம். அதைப்போன்று கலசத்தை சுற்றி 8 நாணயங்களை வைத்து பூஜை செய்து அதனை பீரோவில் வைக்கலாம். மேலும், மஞ்சள் கயிறை பூஜை செய்த பின்பு பெண்கள் கழுத்தில் அணிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்தால் தீர்க்க சுமங்கலி அருள் பெற முடியுமாம்.